ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த தனியார் நிறுவன ஊழியர் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை - சோகம்..!

மேட்டுப்பாளையம் விஜிபி கார்டன் பகுதியை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் சல்மான், ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் வாழ அச்சமாக இருப்பதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை.


கோவை: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அடுத்த மேட்டுப்பாளையம் விஜிபி கார்டன் பகுதி சேர்ந்தவர் ஷாஜகான். இவரது மகன் சல்மான் (22) அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார்.

இதனிடையே நேற்று மாலை வழக்கம்போல் வேலையை முடித்துவிட்டு வீட்டுக்குச் திரும்பிய சல்மான் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், சல்மானின் தந்தை வீட்டுக்கு வந்த போது, சல்மான் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இதையடுத்து தற்கொலை தொடர்பாக தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கிணத்துக்கடவு போலீசார் சல்மான் உடலை மீட்டு, பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில், வீட்டில் சல்மான் எழுதி வைத்த கடிதம் ஒன்றை போலீசார் கைப்பற்றினர். அவரது கடித்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கடன் வாங்கி ஆன்லைன் சூதாட்டம் விளையாடி பணத்தை இழந்து விட்டேன். எனவே வாழ்வதற்கு அச்சமாக உள்ளது என்னை மன்னித்து விடுங்கள்.

இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து போலீசார் சல்மான் தற்கொலை செய்து கொண்டு குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆன்லைன் சூதாட்டத்தால் தனியார் நிறுவன ஊழியர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...