கோவையில் ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து திமுக சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பரபரப்பு..!

கோவை வடக்கு மண்டல திமுக சார்பில், ஆளுநர் ஆர்.என்.ரவி 21 சட்ட மசோதாக்களை கிடப்பில் போட்டுள்ளதாக கூறி கோவை மாநகர் முழுவதும் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



கோவை: கோவை திமுக வடக்கு மண்டல தலைவராக இருந்து வருபவர் வே.கதிர்வேல். இந்நிலையில், இவரது சார்பில் ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து கோவை மாநகரின் பல்வேறு பகுதியில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.



அந்த போஸ்டர் ஆட்டுக்கு தாடியும் நாட்டுக்கு கவர்னரும் தேவையில்லை என பேரறிஞர் அண்ணா கூறியதை முதன்மையாக கொண்டு அச்சிடப்பட்டுள்ளது. மேலும் அதில், ஆளுநரின் ஆண்டு செலவு 6.5 கோடி எனவும், 2020 முதல் இந்த ஆண்டு மே 30ஆம் தேதி வரை 21 சட்ட மசோதாக்கள் நிலுவையில் இருப்பதாக தெரியவந்துள்ளதாக பட்டியல் அச்சிடப்பட்டுள்ளது.



கூட்டுறவு சங்கங்களின் நிர்வாகிகள் பதவி காலத்தை 5 ஆண்டுகளில் இருந்து 3 ஆண்டுகளாக குறைப்பது தொடர்பான சட்ட மசோதா, தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆங்கிலோ இந்தியன் உறுப்பினரை தேர்வு செய்வதை நிறுத்தி வைப்பதற்கான மசோதா, தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு சட்ட திருத்தம், ஆன்லைன் ரம்மி ஒழிப்பு மசோதா உள்ளிட்ட 21 மசோதாக்கள் குறிப்பிடப்பட்டு "இவையெல்லாம் ஆளுநர் அலமாரியில் நெடுந்தூக்கம்!" என குறிப்பிடப்பட்டுள்ளது.



மேலும் அந்த போஸ்டரில் இதற்கு மேலும் தமிழ்நாட்டு மக்கள் குறட்டை விட்டு தூங்க முடியுமா? தூங்கினால் துயரப்பட நேரும் எச்சரிக்கை என அச்சிடப்பட்டுள்ளது.



கோவை மாநகர் முழுவதும் ஆளுநரை கண்டித்து ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...