கோவை குனியமுத்தூர் அருகே டாஸ்மாக் கடையில் கள்ள நோட்டை மாற்ற முயன்ற இளைஞர் கைது..!

புட்டுவிக்கி சாலையில் உள்ள டாஸ்மாக் கடையில் ரூ.500 கள்ள நோட்டை மாற்ற முயன்ற இளைஞரை ஊழியர்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்த நிலையில், அவரிடம் இருந்து ரூ.28,500 மதிப்புள்ள கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


கோவை: கோவை மாவட்டம் குனியமுத்தூர் புட்டுவிக்கி சாலையில் டாஸ்மாக் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்றைய தினம் (9.12.2022) இந்த டாஸ்மாக் கடைக்கு வந்த இளைஞர் ஒருவர் ரூ.500 நோட்டு கொடுத்து மது பாட்டில் வாங்கியுள்ளார்.

அப்போது, கடையில் இருந்த காசாளர் அந்த நோட்டை சோதனை செய்த போது அது கள்ள நோட்டு என்பது தெரியவந்தது. இதையடுத்து டாஸ்மாக் ஊழியர்கள் அந்த இளைஞரை மடக்கிப் பிடித்து, குனியமுத்தூரில் போலீசில் ஒப்படைத்தனர்.

அந்த நபரிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் பிடிபட்ட நபர் மதுக்கரை மலை நகர் பகுதியை சேர்ந்த மகேந்திரன் மகன் ரமேஷ் (20) என்பது தெரியவந்தது.

மேலும் அவர் காலி மதுபாட்டில்களை சேகரித்து விற்பனை செய்யும் வேலை செய்து வந்ததும், கடந்த சில நாட்களுக்கு முன் எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் சாலையில் கிடந்த கவரில் ரூ.28,500 மதிப்பிலான 500 ரூபாய் நோட்டுகள் கிடைத்ததாகவும் தெரியவந்தது.

இதனை கொண்டே டாஸ்மாக் கடையில் நேற்றைய தினம் மதுபாட்டில்களை வாங்கியுள்ளார். இதையடுத்து ரமேஷை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த ரூ.28,500 மதிப்பிலான கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டாஸ்மாக் கடையில் ஒருவர் கள்ள நோட்டுகளை மாற்ற முயன்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...