கோவை குனியமுத்தூர் அருகே வாகன சோதனையின் போது கேரளாவுக்கு கடத்த முயன்ற 3.5 டன் ரேசன் அரிசி பறிமுதல்…!

கோவை - பாலக்காடு நெடுஞ்சாலை குனியமுத்தூர் அரசு மேல்நிலை பள்ளி அருகே கேரளா பதிவு எண் கொண்ட மினி ஆட்டோவை சோதனை செய்தபோது, அதில் மூட்டை மூட்டையாக ரேசன் அரிசி பதுக்கி கடத்த முயன்றது தெரியவந்தது.


கோவை: கோவை குனியமுத்தூர் அருகே கேரளாவிற்கு கடத்த முயன்ற 3.5 டன் ரேசன் அரிசியை குடிமை பொருள் குற்றபுலனாய்வு போலீசார் பறிமுதல் செய்தனர்.

கோவையில் இருந்து கேரளாவிற்கு பொதுவிநியோக ரேசன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க குடிமை பொருள் குற்றப்புலனாய்வு போலீசார் தனிப்படை அமைத்து கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில், கோவை - பாலக்காடு நெடுஞ்சாலை குனியமுத்தூர் அரசு மேல்நிலை பள்ளி அருகே ஆய்வாளர் விவேகானந்தன், சார்பு ஆய்வளர் சந்திரசேகர், கலைச்செல்வன், ஆகியோர் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர், அப்போது அங்கு வந்த கேரளா பதிவு எண் கொண்ட மினி ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனர்.

அப்போது, அதில் மூட்டை மூட்டையாக ரேசன் அரிசி பதுக்கி கடத்த முயன்றது தெரியவந்தது. இதையடுத்து, வாகனத்தை ஓட்டி வந்த கேரளா மாநிலத்தை சேர்ந்த ராமதாஸ் (29) என்பவரை பிடித்து விசாரித்த போது, கோவையில் மலிவு விலைக்கு ரேசன் அரிசியை வாங்கி அதனை கேரளா கள்ள சந்தையில் விற்பனை செய்ய கடத்திச் சென்றது தெரியவந்தது.

இதையடுத்து, வாகனத்தில் இருந்து 3.5 டன் ரேசன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார், ராமதாஸை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...