மூளைச் சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்

திருப்பூரை சேர்ந்த ஆறுமுகம் கடந்த 6-ம் தேதி அவரது மனைவியுடன் பல்லடம் அருகில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக எதிரே வந்த கார் மீது மோதி விபத்துக்குள்ளாகியது. இதில் ஆறுமுகம் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் ஹெல்மட் அணிந்திருக்கவில்லை. அவரை உடனடியாக சூலூர் கே.எம்.சி.எச் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக கே.எம்.சி.எச் அவிநாசி சாலை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்தபோதிலும் அவரது உடல் நிலையில் எந்த வித  à®®à¯à®©à¯à®©à¯‡à®±à¯à®±à®®à¯à®®à¯ ஏற்படவில்லை.

இந்த நிலையில் கடந்த 8-ஆம் தேதி அவருக்கு மூளைச்சாவு எற்பட்டது. அதனைத் தொடர்ந்து அவரது மகன் சரவணன் மற்றும் மகள் சங்கீதா அவர்களும் தந்தையின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன் வந்தார். அவரது கண்கள், கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் ஆகியவை தானமாக பெறப்பட்டடு, கல்லீரல் மற்றும் சிறுநீரகம் கே.எம்.சி.எச் மருத்துவமனைக்கும், கண்கள் அரவிந்த் மருத்துவமனைக்கும் வழங்கப்பட்டது.

இது குறித்து கே.எம்.சி.எச் மருத்துவமனை தலைவர் நல்ல G. பழனிசாமி  à®•ூறுகையில், மக்களிடையே உடல் உறுப்பு தானம் குறித்து அதிக விழிப்புணர்வு தேவைப்படுகிறது. ஒருவர் இறந்த பிறகு அவரது உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டால் அது பலரது உயிரைக் காப்பாற்ற உதவும். பின்னர்  à®‰à®Ÿà®²à¯ உறுப்பு தானம் வழங்கிய ஆறுமுகம் குடும்பத்திற்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் கூறினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...