நீலகிரி உதகையில் கார், லாரி நேருக்கு நேர் மோதி விபத்து - கர்நாடகாவை சேர்ந்த சுற்றுலா பயணி பலியான சோகம்..!

உதகை - கூடலூர் நெடுஞ்சாலையில் உள்ள தலைகுந்தா பகுதியில் அடர் பனிமூட்டம் காரணமாக காய்கறி ஏற்றி வந்த லாரியும் சுற்றுலா சென்ற காரும் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் பலியான நிலையில் மூவர் படுகாயமடைந்து கோவை மருத்துவமனையில் அனுமதி.



நீலகிரி: உதகையிலிருந்து கூடலூர் செல்லும் நெடுஞ்சாலையில் உள்ள தலைக்குந்தா பகுதியில் அடர்ந்த பனிமூட்டம் காணப்பட்டது.



இந்நிலையில் மலை காய்கறி ஏற்றி வந்த லாரியும், சுற்றுலாப் பயணிகள் சென்ற காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.



இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே காரில் பயணம் செய்த கர்நாடகா மாநிலம் கொள்ளேகாளை பகுதியை சேர்ந்த மகாநந்தா(34) என்பவர் உயிரிழந்தார்.

மேலும் இந்த விபத்தில், அவரது மனைவி லாவண்யா மற்றும் அவர்களது உறவினர்கள் லிங்கராஜ் மற்றும் ராஜேஷ்வரி ஆகியோர் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்து அங்கு வந்த போலீசார் காயமடந்த 3 பேரையும் மீட்டு உதகை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.



பின்னர், 3 பேரும் மேல் சிகிச்சைகாக கோவைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

சம்பவம் குறித்து புதுமந்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த 2 நாட்களாக மண்டாஸ் புயல் காரணமாக உதகை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடும் மூடுபனி மற்றும் மழை பெய்து வந்ததால், எதிரே வரும் வாகனங்கள் சரிவர தெரியாமல் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக் உள்ளாகி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...