திருப்பூர் மற்றும் கோவை மாவட்டத்தில் இருந்து, கேரளாவுக்கு கடத்த முயன்ற 27.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

திருப்பூர் காங்கேயம் அடுத்த ஓலப்பாளையம் பகுதியில் நடைபெற்ற வாகன சோதனையில், கேரளாவுக்கு கடத்த முயன்ற 20 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், கோவை சுந்தராபுரம் அருகே கிடங்கில் பதுக்கி வைக்கப்பட்ட 7.5 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் அதிக அளவில் ரேஷன் அரிசி கேரளாவுக்கு கடத்தப்படுவதாக புகார்கள் எழுந்த நிலையில், குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு துறையினர், தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்த ஓலப்பாளையம் பகுதியில் குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது காங்கேயம் நோக்கி வந்த லாரி ஒன்றை நிறுத்தி சோதனை செய்தனர்.

அப்போது அதில் 20 டன் அளவில் ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது.



இதனையடுத்து உடனடியாக ஓட்டுனரை கைது செய்த போலீசார், அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் கும்பகோணத்தைச் சேர்ந்த சதீஷ்குமார்(31) என்பதும் கேரளாவுக்கு ரேஷன் அரிசியை கடத்திச் செல்வதும் தெரியவந்தது.



தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் கும்பகோணத்தைச் சேர்ந்த வினோத் என்பவர் தனது சுற்றுவட்டார பகுதிகளில் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி அதனை கேரளாவிற்கு கடத்தி கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்து வருவது தெரியவந்தது.

இதனை அடுத்து 20 டன் ரேஷன் அரிசியை லாரியுடன் பறிமுதல் செய்த குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு துறை போலீசார் தனிப்படை அமைத்து வினோத்தை தேடி வருகின்றனர்.

இதேபோல், கோவை மாவட்டம் சுந்தராபுரம் - மதுக்கரை சாலையில் பேஸ் டூ பகுதியில் உள்ள தனியார் கிடங்கில் ரேசன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக பறக்கும் படை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.



இதையடுத்து பறக்கும் படை தனி வட்டாட்சியர் முத்துக்குமார், தனி வருவாய் ஆய்வாளர் கவுதம் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஆளின்றி இருந்த கிடங்கை திறந்து பார்த்த போது மூட்டை மூட்டைகளாக ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது.

இந்த நிலையில், அங்கிருந்த 155 மூட்டைகளில் இருந்த 7.5 டன் ரேஷன் அரிசியை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து அதனை குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வு போலீசிடம் ஒப்படைத்தனர். மேலும் உள்ளூரில் ரேஷன் அரிசியை சேகரித்து கிடங்கில் பதுக்கி வைத்திருந்த நபர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற சுமார் 27.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...