கோவையில் வாசனை திரவிய கடையில் பயங்கர தீ விபத்து - பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீக்கிரையாகின

கோவை டவுன்ஹால் அருகே தனியார் வாசனை திரவிய கடையில் மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில், பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்த நிலையில், தீயணைப்பு துறையினர் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.


கோவை: கோவை மாவட்டம் டவுன்ஹால் அடுத்த வி.எச் சாலையில் முசா என்பவருக்கு சொந்தமான வாசனை திரவிய கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் நள்ளிரவு 1.30 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தீ மளமளவென கடை முழுவதும் பரவிய நிலையில், கடை உரிமையாளர் மூசா தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்துள்ளார்.



இதையடுத்து 5 தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அதற்குள் கடையில் இருந்த பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீக்கிரையாகின.

இச்சம்பவம் தொடர்பாக வெரைட்டி ஹால் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மின்கசிவு காரணமாக தீ பிடித்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...