உதகையில் புதிய அங்கன்வாடி மையம், பல்நோக்கு சமுதாய கூடத்தை திறந்து வைத்த வனத்துறை அமைச்சர்..!

நீலகிரி உதகை ஊராட்சி ஒன்றியத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில், கட்டப்பட்ட அங்கன்வாடி மையம், பல்நோக்கு சமுதாய கூடத்தை வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், ஆட்சியர் அம்ரித் ஆகியோர் திறந்து வைத்தனர்.


நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில், குன்னூர் ஊராட்சி ஒன்றியம், உபதலை ஊராட்சி கரிமராஹட்டி பகுதியில் ரூ.16.07 லட்சம் மதிப்பில் புதிய அங்கன்வாடி மையம் கட்டப்பட்டுள்ளது.



அதே போல உதகை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கக்குச்சி ஊராட்சி ஒன்னதலை பகுதியில் ரூ.42.25 லட்சம் மதிப்பில் பல்நோக்கு சமுதாய கூடமும் கட்டப்பட்டது. இந்த கட்டிடங்களின் திறப்பு விழா இன்று நடைபெற்றது.



இந்த நிகழ்வில் வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அம்ரித் ஆகியோர் கலந்து கொண்டு திறந்து வைத்து கட்டிடங்களை பார்வையிட்டனர்.



நிகழ்ச்சிக்கு பின்னர் வனத்துறை அமைச்சர் கா.ராமசந்திரன் பேசியதாவது, அங்கன்வாடி மையம் என்பது மிக முக்கியமான ஒன்று. இன்றைய தினம் குழந்தைகள் பயன் பெறும் வகையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.16.07 லட்சம் மதிப்பில் உபதலை ஊராட்சிக்குட்பட்ட கரிமராஹட்டியில் அங்கன்வாடி மையம் திறந்து வைத்தது மகிழ்ச்சி தருகிறது.

ஒவ்வொரு கிராமத்திலும் அங்கன்வாடி மையங்கள் உள்ள காரணத்தினால் பணிக்கு செல்லும் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளை பாதுகாப்பாக இருக்க வைக்க அங்கன்வாடி மையத்தை பயன்படுத்துகின்றனர். அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கு தேவையான உணவு, கல்வி மற்றும் நல்ல பழக்கங்கள் கற்று தரப்படுகிறது.

மாதந்தோறும் மருத்துவர்கள் ஒவ்வொரு அங்கன்வாடி மையத்திற்கு சென்று குழந்தைகளின் உடல் நலம், எடை, உயரம் ஆகியவற்றினை பரிசோதித்து அதற்கேற்றவாறு தாய்மார்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி சத்தான உணவுகளை வழங்கி குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் உடல்நிலை பற்றி அறிவுரைகள் வழங்கப்படுகிறது.

தாய்மார்கள் தங்கள் குழந்தைகளை கட்டாயமாக அங்கன்வாடி மையத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். கல்வி மிகவும் முக்கியமான ஒன்றாகும். அனைத்து குழந்தைகளும் கல்வி கற்க வேண்டும். எனவே தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து திட்டங்களையும் குழந்தைகள் மற்றும் குழந்தைகளின் பெற்றோர்கள் அறிந்து பயன் பெற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெயராமன், ஊராட்சி ஒன்றிய தலைவர்கள் மாயன் என்ற மாதன் (உதகை), சுனிதா நேரு (குன்னூர்), உபதலை ஊராட்சி தலைவர் பாக்கியலட்சுமி சிதம்பரம், உதகை வருவாய் கோட்டாட்சியர் துரைசாமி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் தேவகுமாரி, வட்டாட்சியர்கள் சிவக்குமார் (குன்னூர்), ராஜசேகர்(உதகை), வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மோகன் குமாரமங்கலம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...