மருதமலை கோவில் ராஜகோபுர படிக்கட்டில் உருட்டி விடப்பட்ட பழைய பொருட்கள் - கோவில் நிர்வாகம் விளக்கம்

ராஜகோபுரம் படிக்கட்டில் இருந்து பழைய பொருட்களை உருட்டி விடும் விடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து, கோவில் பொருட்களை எதற்காக இப்படி அப்புறப்படுத்த வேண்டும் என்று பக்தர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.



கோவை: கோவை மருதமலை கோவில் தூய்மை பணியின் போது ராஜகோபுரம் படிக்கட்டில் இருந்து பழைய பொருட்களை உருட்டி விட்ட விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பக்தர்கள் கோவிலுக்கு அன்பளிப்பாக கொடுத்த பொருட்களை இப்படி அஜாக்கிரதையாக அப்புறப்படுத்துவதா என பல்வேறு கேள்விகள் எழுந்த நிலையில், சம்பவம் குறித்து கோவில் நிர்வாகத்தினர் விளக்கம் அளித்துள்ளனர்.

கோவையில் பிரசித்திபெற்ற மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், ராஜகோபுரம் படிக்கட்டில் உள்ள அறையில் இருந்து, பழைய பொருட்களை அகற்றி சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.

அப்போது, சிவப்பு கம்பளம், சாக்குப்பை மற்றும் சில பழைய பொருட்களை, படிக்கட்டில் இருந்து பணியாளர்கள் தூக்கி வீசி, அங்கிருந்து கீழே எடுத்து செல்வது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகியது.

அந்த வீடியோவை பக்தர் ஒருவர் செல்போனில் படம் பிடித்து சமூக வலை தளங்களில் பகிர்ந்துள்ளார்.

அந்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலான நிலையில், எதற்காக இப்படி கோவில் பொருட்களை படிக்கட்டில் இருந்து கீழே உருட்ட வேண்டும் என்று பக்தர்கள் கேள்வி எழுப்பினர்.

இது குறித்து, மருதமலை கோவில் நிர்வாகத்தினர் கூறும் போது: கோவிலில் உள்ள பழைய பொருட்களை அகற்றி சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. தேங்கியுள்ள பழைய பொருட்களில் கொசுக்கள் மற்றும் பூச்சிகள் உற்பத்தியாவதால் அவை அப்புறப்படுத்தி சுத்தம் செய்யப்பட்டது.

அப்போது, கனமான பொருட்கள் அனைத்தும் படிக்கட்டில் இறங்கி எடுத்து செல்லப்பட்டது. சுமார், 15 முறைக்கு மேல் படிக்கட்டில், மேலும் கீழும் நடந்து சென்று இறக்கி வைத்துள்ளனர். இந்நிலையில், சாக்கு, துணி போன்ற பழைய பொருட்கள் மட்டும் படிக்கட்டில் இருந்து உருட்டி விடப்பட்டது.

என்ன நடந்தது என்பதை முழுமையாக வீடியோ எடுக்காமல், அனைத்து பொருட்களையும் தூக்கி வீசியதாக தவறான முறையில் தகவலை பரப்பியுள்ளனர்" என்று தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...