திருப்பூரில் ‘மீண்டும் மஞ்சப்பை’ உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்த எம்.எல்.ஏ செல்வராஜ்

பல்லடம் அடுத்த சித்தம்பலம் ஊராட்சியில் மீண்டும் மஞ்சப்பை திட்டத்தை தொடங்கி வைத்த திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ செல்வராஜ், இருசக்கர விழிப்புணர்வு வாகனம், சமுதாய நலக்கூடத்தின் பூமி பூஜை உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளை துவக்கி வைத்தார்.



திருப்பூர்: தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் பைகளை ஒழிப்பதில் தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது. மேலும், மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த “மீண்டும் மஞ்சப்பை” பயன்பாடு குறித்த பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.

இதன் தொடர்ச்சியாக, திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்துள்ள சித்தம்பலம் ஊராட்சி மற்றும் தனியார் ரோட்டரி நிர்வாகத்தினர் இணைந்து சித்தம்பலம் ஊராட்சியை பிளாஸ்டிக் இல்லா ஊராட்சியாக மாற்றும் முயற்சியில் களமிறங்கியுள்ளனர்



இந்த நிகழ்வை திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ், மக்களிடம் மீண்டும் மஞ்சப்பை திட்டத்தை துவக்கி வைத்தார்.



அப்போது, பல்லடம் ரெயின்போ ரோட்டரியை சேர்ந்த ஆறுமுகம் என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் தமிழகம் முழுவதும் சென்று பொதுமக்கள் கூடும் முக்கிய இடங்களில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு மற்றும் மஞ்சப்பை பயன்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பிரச்சார பயணத்தையும் துவக்கி வைத்தார்.



இதையடுத்து சித்தம்பலம் ஊராட்சிக்கு உட்பட்ட புள்ளியப்பம் பாளையம் பகுதியில் 38 லட்சம் ரூபாய் மதிப்பில் உணவு அருந்தும் கூடத்துடன் கூடிய சமுதாய நலக்கூடம் அமைக்கும் பணிக்கான பூமி பூஜையை துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் பல்லடம் மேற்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...