பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் இன்ஸ்டா ரீல்ஸ் - பல்லடம் அருகே 2 இளைஞர்கள் கைது..!

பல்லடம் அருகே போக்குவரத்தை மறித்து, பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வீடியோ பதிவிட்ட 2 இளைஞர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் கரைப்புதூரை அடுத்த லட்சுமி நகர் பகுதியிலிருந்து முருகம்பாளையம் செல்லும் பாதையில் உள்ள கிருஷ்ணா பேக்கரி அருகில் நடுரோட்டில் பைக்கை குறுக்கே நிறுத்தி 2 இளைஞர்கள் இன்ஸ்டாகிராமில் பதிவிடுவதற்கு ரீல்ஸ் வீடியோ எடுத்துள்ளனர்.

பின்னர் அந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெடிகுண்டு உள்ளது, கோர்ட்டுக்கு நாங்க வந்தா மஜா மஜா என்ற ஆல்பம் பாடலை வைத்து ரீல்ஸ் செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.



இந்நிலையில், அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக வைரலானது. வாகன போக்குவரத்தை நிறுத்தி வாகன ஒட்டிகளுக்கு இடையூறு செய்தது மட்டுமல்லாது பொதுமக்களை அச்சுறுத்தும் படியாக வீடியோ வெளியிட்டது குறித்து பல்லடம் காவல் துறையினருக்கு தகவல் வந்துள்ளது.



விசாரணையில் வீடியோவை பதிவு செய்தது முருகன் மில் பகுதியை சேர்ந்த தமிழ்செல்வன் மற்றும் கணபதிபாளையம் பகுதியை சேர்ந்த காளிச்சாமி என்று தெரியவந்தது.



நடுரோட்டில் வாகன போக்குவரத்தை நிறுத்தி வீடியோ எடுத்து போக்குவரத்துக்கு இடையூறாகவும் பொது மக்களை அச்சுறுத்தும் படியாக பதிவிட்டதற்காகவும், இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும், கைதான தமிழ்ச்செல்வன் மற்றும் காளிச்சாமி மீது ஏற்கனவே கொலை முயற்சி, போதை பொருட்கள் விற்பனை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...