கோவையில் பாரதியார் நினைவு நூற்றாண்டு நூல்கள் மற்றும் இசைப்பேழை வெளியீடு

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மகாகவி பாரதியார் பிறந்தநாள் விழாவில், பாரதியார் பாடல்களின் இசைப்பேழை மற்றும் பாரதியார் நினைவு நூற்றாண்டு நூல்களை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் வெளியிட்டார்.


கோவை: இன்று கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மகாகவி பாரதியார் பிறந்தநாள் விழாவில், பாரதியார் பாடல்களின் இசைப்பேழை மற்றும் பாரதியார் நினைவு நூற்றாண்டு நூல்களை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் வெளியிட்டார்.



பின்னர், இது தொடர்பாக நடைபெற்ற கலை இலக்கிய போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ மாணவியர்களுக்கு இளம் பாரதி விருதினை வழங்கி பாராட்டினார்.



இந்நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், பாரதியாரின் பிறந்தநாளான டிசம்பர் 11ம் தேதியை தேசிய மொழிகளின் தினமாக மத்திய அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு பாரதியாரை பெருமைப்படுத்தும் வகையில், கடந்த ஆண்டு அவரது பிறந்தநாளான்று 14 அறிவிப்புகளை வெளியிட்டது.

வாரணாசியில் பாரதியார் தங்கிய இடத்தில் புகைப்படங்களுடன் கூடிய அருங்காட்சியத்தை நேற்றைய தினம் தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்தார். பாரதியாரின் பாடல்கள் இங்கு மட்டுமல்ல உலகெங்கிலும் ஒலிக்க வேண்டும். மகாகவி பாரதியாரின் நவீன நாடகமான பாஞ்சாலி சபதம் நாடகத்தின் தொகுப்பு மற்றும் பாரதியாரின் பாடல்கள் இசைப்பேழை இன்று வெளியிடப்பட்டுள்ளது.

நல்லதை எண்ண வேண்டும். தெளிந்த நல்ல அறிவு வேண்டும் போன்ற கருத்துக்களை தன் பாடல்கள் மூலம் பாரதியார் முன் வைத்துள்ளார். அதேபோல, பெண் உரிமை, சாதி ஒழிப்பு உள்ளிட்டவைகள் குறித்து பல்வேறு கவிதைகள் எழுதியுள்ளார்.

பன்முக ஆளுமை கொண்ட பாரதியார், இந்தியாவில் உள்ள 20 மொழிகளில் பேசவும், எழுதவும் கூடிய திறமை கொண்டிருந்தார். ஆகேவே, இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளிலும் பாரதியாரின் கவிதைகளை மொழி பெயர்ப்பு செய்யும் முயற்சி நடைபெற்று வருகின்றது, இவ்வாறு ஆட்சியர் பேசினார்.



இந்நிகழ்ச்சியில், பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர், பொறுப்புக் குழு உறுப்பினர்கள் டாக்டர் வாசுகி, முனைவர் லவ்லினா, தமிழ் துறை தலைவர் முனைவர் சி.சித்ரா உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...