ஆந்திராவில் இருந்து திருப்பூருக்கு கஞ்சா கடத்தி வந்த 6 பேர் கொண்ட கும்பல் கைது - 9 கிலோ கஞ்சா, ஆயுதங்கள் பறிமுதல்..!

ஆந்திராவில் இருந்து சரக்கு ஆட்டோ மூலம் திருப்பூருக்கு கஞ்சா கடத்தி வந்த 6 பேர் கொண்ட கும்பலை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து சரக்கு ஆட்டோவுடன் 9 கிலோ கஞ்சா, பட்டாக்கத்தி போன்ற ஆயுதங்கள் பறிமுதல்.



திருப்பூர்: ஆந்திராவிலிருந்து திருப்பூருக்கு கஞ்சா கடத்தி வரப்படுவதாக மாநகரப் போலீசருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில், மாநகர தனிப்படை போலீசார் முத்தணம்பாளையம் அருகே தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.



இந்நிலையில், அவ்வழியாக சந்தேகப்படும்படி வந்த சரக்கு ஆட்டோவை ஒன்றை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது, ஆட்டோவில் ஒன்பது கிலோ கஞ்சாவும், பட்டாக்கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.



இதனையடுத்து அவற்றை பறிமுதல் செய்த போலீசார், சரக்கு ஆட்டோவில் வந்த திருப்பூர் முத்தணம்பாளையத்தை சேர்ந்த ஜெபராஜ், கரட்டாங்காடு சேர்ந்த ராஜா, செட்டிபாளையத்தை சேர்ந்த தீனதாயளன், பாலகிருஷ்ணன், சுதன், வீரபாண்டியை சேர்ந்த லட்சுமணன் உள்ளிட்ட ஆறு பேரை கைது செய்தனர்.

இதனை தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஆந்திராவில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து திருப்பூரில் சப்ளை செய்து சம்பாதிக்க திட்டமிட்டது தெரியவந்தது.

இதனையடுத்து 6 பேரையும் கைது செய்த நல்லூர் போலீசார் குற்றவாளிகளை சிறையில் அடைத்தனர். மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடைய தலைமறைவாக உள்ள இரண்டு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

சரக்கு ஆட்டோ மூலம் திருப்பூருக்கு ஆறு பேர் கொண்ட கும்பல் கஞ்சா கடத்தி வந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...