உதகை அருகே கோவிலுக்கு சென்ற போது காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய 4 பெண்களை தேடும் பணி தீவிரம்

உதகை அடுத்த சீகூர் வனப்பகுதியில் உள்ள ஆனிக்கல் மாரியம்மன் கோவிலுக்கு சென்று திரும்பிய போது காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி மாயமான 4 பெண்களை தேடும் பணியில் வனத்துறை, காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினர் தீவிரம்.



நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள சீகூர் வன பகுதியில் பிரசித்தி பெற்ற ஆனிக்கல் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் விசேஷ நாட்களில் மட்டுமே திறக்கப்படுவது வழக்கம்.

இந்த நிலையில் கார்த்திகை தீபம் திருவிழாவையொட்டி நேற்றைய தினம் கோவில் திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. இதி பங்கேற்பதற்காக உதகை, கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதியை சார்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கோவிலுக்கு வந்திருந்தனர்.



இந்நிலையில், வனப்பகுதியில் அமைந்துள்ள இக்கோவிலை சென்றடைய ஆனிக்கல் ஆற்றை கடந்து செல்ல வேண்டும். நேற்று காலை ஆற்றில் குறைந்த அளவு தண்ணீர் ஓடிய நிலையில், மதியத்திற்கு மேல், மலைப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது.

இதனையடுத்து பக்தர்கள் ஒவ்வொருவராக ஆற்றை கடக்க முயன்ற போது, உதகை கடநாடு ஊராட்சிக்கு உட்பட்ட ஜெக்கலொரை கிராமத்தை சேர்ந்த சரோஜா(65), வாசுகி(45), விமலா(35) மற்றும் சுசிலா(56) ஆகிய 4 பெண்கள் வெள்ளத்தில் அடித்து சென்று மாயமானதாக கூறப்படுகிறது.



இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த மற்ற பக்தர்கள் உடனடியாக இதுதொடர்பாக சீகூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், காவல்துறையினர், தீயணைப்பு துறையினர் பொதுமக்கள் என அனைவரும் சேர்ந்து மாயமானவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.



ஆனால் இரவு நேரம் என்பதாலும் ஆற்றில் தொடர்ந்து அதிகமான தண்ணீர் ஓடியதாலும் மாயமான 4 பேரின் உடல்களை கண்டுபிடிக்கும் பணி நிறுத்தபட்டது. அதனையடுத்து இன்று காலை 7 மணி முதல் உதகை, கூடலூரை சேர்ந்த தீயணைப்பு துறையினர் மற்றும் சீகூர் வனத்துறையினர் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் 3 குழுக்களாக பிரிந்து ஆனிக்கல் ஆற்றில் இருபுறமும் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

கோவிலுக்கு சென்ற 4 பெண்கள் காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட சம்பவம் சீகூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...