சேலம் விருத்தாசலம் வழித்தடத்தில் ஏத்தாப்பூர் ரயில்நிலையத்தில் சேலம் கோட்ட வணிகவியல் பிரிவு அதிகாரிகளால் திடீர் பயணச்சீட்டு பரிசோதனை


இன்று (08.02.2017)  சேலம் விருத்தாசலம் வழித்தடத்தில்  பயணிகள் ரயில்களில் (ரயில் எண்.76847-சேலம் விருத்தாசலம் பயணிகள் ரயில், ரயில் எண்.76850 விருத்தாசலம் சேலம் பயணிகள் ரயில், ரயில் எண் 56513- காரைக்கால் பெங்களூரு பயணிகள் ரயில் மற்றும் ரயில் எண் 76849- விருத்தாசலம் சேலம் பயணிகள் ரயில்) சேலம் கோட்ட வணிகவியல் பிரிவு அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட திடீர் பயணச்சீட்டு பரிசோதனையில் 62 பேர் தகுந்த பயணச்சீட்டு இல்லாமல் பயணிப்பது கண்டு பிடிக்கப்பட்டு அவர்களிடம் இருந்து 19,770 ரூபாய் பயணச்சீட்டுத் தொகை மற்றும் அபராதமாக வசூலிக்கப்பட்டது.

அது போல, 19 பேர் தகுந்த புக்கிங் இல்லாமல் சுமைகளை ஏற்றிச் சென்றது கண்டு பிடிக்கப்பட்டு அவர்களிடம் இருந்து 3,170 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டது. இந்த சோதனையை சேலம் கோட்ட துணை வணிகவியல் மேலாளர் எம். ஷாஜஹான் தலைமையிலான 13 பயணச்சீட்டு பரிசோதகர்கள், 3 ரயில்வே பாதுகாப்புப் படை வீர்ர்கள் அடங்கிய குழுவினர் மேற்கொண்டனர். இது போன்ற திடீர் பயணச்சீட்டு பரிசோதனைகள் மேலும் பல இடங்களில் செய்யப்படும் என்று சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் ஹரி சங்கர் வர்மா தெரிவித்தார்.

Newsletter

சூலூர் சிறுமி பாலியல் வன்கொடுமை,கொலை வழக்கு: போக்சோ நீதிமன்றத்தில் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல்

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், தீவிர விசாரணைக்குப்...

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது க...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...