பால், மின் கட்டண உயர்வை கண்டித்து பல்லடத்தில் உடுமலை ராதாகிருஷ்ணன் தலைமையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

மின் கட்டணம், பால் விலை, சொத்து வரி உயர்வு உள்ளிட்டவற்றை கண்டித்தும், திமுக அரசுக்கு எதிராக முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தலைமையில் அதிமுக ஆர்ப்பாட்டத்தில் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு.



திருப்பூர்: தமிழக முழுவதும் தி.மு.க அரசால் ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வு, பால் விலை உயர்வு, மின் கட்டணம், சொத்து வரி உயர்வை கண்டித்து அதிமுகவினர் சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த கொசவம்பாளையம் சாலையில் முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இந்த ஆர்ப்பாட்டத்தின் போது அரசின் சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு ஆகியவற்றை கண்டித்து அதிமுகவினர் கண்டன கோஷங்களை எழுப்பினர்.



இதனையடுத்து முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசியதாவது, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 2011ஆம் ஆண்டு மக்களுக்கு குறைந்த விலையில் கேபிள் டிவி திட்டத்தை தேர்தல் அறிக்கையில் அறிவித்தார்.

கடந்த ஆட்சியில் 1 கோடி மக்களுக்கு குறைந்த விலையில் கேபிள் டிவி திட்டத்தை வழங்கினோம். அப்போது 58,000 கேபிள் டிவி ஆபரேட்டர்கள் தமிழ்நாட்டில் இருந்தனர். பின்னர் மத்திய அரசாங்கம் டிஜிட்டல் முறையில் மாற வேண்டும் என கூறினர்.

அம்மாவின் மறைவுக்குப் பிறகு எந்த மாநிலத்தில் இல்லாத நிலையில் அரசு குறைந்த விலையில் வழங்குவதை எடுத்துக்கூறி அன்றைய செய்தி ஒளிபரப்பு அமைச்சர் மற்றும் தற்போதைய துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடுவிடம் டிஜிட்டல் முறையில் ஒளிபரப்பு செய்ய அனுமதி வாங்கினோம்.

கடந்த ஆட்சியில் 38 லட்சம் செட்டாப் பாக்ஸ்களை வழங்கினோம். தற்போதைய அரசு கேபிள் டிவி நிறுவனத்தை நடத்தியது. மத்திய அரசாங்கம் யாரு வேண்டுமானாலும் இந்த தொழிலை நடத்தலாம் என்ற முறையில் சுமார் 50 முதல் 60 பேருக்கு இந்த டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமத்தை வழங்கி உள்ளனர்.

தனியார் கேபிள் டிவி நிறுவனத்துடன் அரசாங்கமும் போட்டி போட்டது. அப்படி மோதுகின்ற போது அரசாங்கத்திடம் பெற்ற செட்டாப் பாக்ஸ்களை தனியாருக்கு மாறுகின்ற கேபிள் ஆபரேட்டர்கள் திரும்ப வழங்க வேண்டும் என்று அரசு கேபிள் டிவி நிறுவனத்திடம் இருந்து அழைப்பு வந்தது.

அதில் சில கேபிள் டிவி ஆபரேட்டர்கள் திரும்பி வழங்கினர். மேலும் பொதுமக்கள் வீட்டை காலி செய்து விட்டு இடம் மாறும் போது இலவச பாக்ஸ்களை வழங்காமல் எடுத்துச் சென்றுள்ளனர். இதனால் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் செட்டாப் பாக்ஸ் திரும்பி வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதனால் அரசாங்கம் அவர்கள் மீது வழக்கு தொடர்வதை விட கேபிள் டிவி ஆபரேட்டரை அழைத்து குழு ஒன்றை அமைத்து சுமுகமாக பேசி அதற்கான தீர்வை ஏற்படுத்த வேண்டும். மேலும் அதிமுக ஆட்சி காலத்தில் தான் பல்வேறு தொலைக்காட்சிகளை தொடங்கினார்கள்.

2011 ஆம் ஆண்டில் ஓரிரு செய்தி சேனல்கள் இருந்த நிலையில் தற்போது 20க்கும் மேற்பட்ட செய்தி சேனல்கள் உள்ளன. அம்மா அரசால் தான் செய்தி சேனல்கள் உருவாக்கப்பட்டது அது இன்று மிகப்பெரிய வளர்ச்சி அடைந்துள்ளது.

மேலும் தமிழக அரசுக்கு வேண்டுகோளாக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மீது பொய் வழக்கு போடாமல் அனைத்து கட்சிக் கூட்டம் கூட்டி இது குறித்து முடிவு எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.



இதனை அடுத்து செய்தியாளர்கள் திமுக அரசு, சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலினுக்கு நாளை அமைச்சர் பதவி வழங்க உள்ளது குறித்து கருத்து கேட்டதற்கு இரு கை எடுத்து கும்பிட்டு விட்டு சென்றுவிட்டார்.



இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் எம்.எஸ்.எம் ஆனந்தன் மற்றும் அதிமுக உறுப்பினர்கள் உட்பட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...