வனவாசத்திற்கு பின் மீண்டும் தாய் கட்சிக்கு வந்துவிட்டேன் - பா.ஜ.க.,வில் இருந்து விலகிய ம.நீ.ம நிர்வாகி..!

இரண்டு ஆண்டுகளுக்கு முன் பா.ஜ.க.,வில் இணைந்த மக்கள் நீதி மய்யத்தின் (ம.நீ.ம) முன்னாள் பொதுச் செயலாளர் அருணாச்சலம், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமலஹாசனை சந்தித்து மீண்டும் கட்சியில் இணைந்துள்ளார்.



கோவை: இரண்டு வருட வன வாசத்திற்கு பிறகு தாய்க்கட்சியான மக்கள் நீதி மய்யத்திற்கு தாயுள்ளத்தோடு நம்மவர் அரவணைத்து ஏற்றுக் கொண்டார், என்று ம.நீ.ம முன்னாள் பொதுச் செயலாளர் அருணாச்சலம் தெரிவித்துள்ளார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன் பா.ஜ.க.,வில் இணைந்த மக்கள் நீதி மய்யத்தின் (ம.நீ.ம) முன்னாள் பொதுச் செயலாளர் அருணாச்சலம், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமலஹாசனை சந்தித்து மீண்டும் கட்சியில் இணைந்துள்ளார்.

மீண்டும் கட்சியில் இணைந்ததை அடுத்து, கோவை டவுன்ஹால் பகுதியில் மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.



பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர், தொண்டர்கள் அனைவரும் தாயுள்ளத்தோடு வரவேற்பு கொடுத்தனர். கடைக்கோடி தொண்டர்கள் வரை அனைவரும் ஏற்றுக் கொண்டனர். நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு நன்றி கூற முதற்பயணமாக கோவை வந்துள்ளேன்.

உடனடியாக களத்திற்கு சென்று தொண்டர்களின் கருத்தை கேட்டு அதனை தன்னிடம் கூறுமாறு நம்மவர் என்னிடம் தெரிவித்தார். அனைத்து மாவட்ட செயலாளர்கள், மண்டல செயலாளர்கள், இங்குள்ளவர்கள் தேர்தலில் உழைத்தமைக்கு நன்றி செலுத்த நான் கடமைப்பட்டுள்ளேன்.

நாடாளுமன்ற தேர்தலில் ம.நீ.ம அமோக வெற்றி பெற ஆலோசனை நடத்தப்படுகிறது. தேர்தலுக்கு இது முதல் தொடக்கமாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கூட்டத்தில் துணைத் தலைவர் தங்கவேலு, மாநில செயலாளர்கள் மயில்சாமி, மூகாம்பிகா ரத்தினம், அனுஷா ரவி மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...