திருப்பூரில் பணம் கேட்டு டாஸ்மாக் பார் ஊழியரை தாக்கிய வழக்கு - 2 பேருக்கு தலா 7 ஆண்டுகள் சிறை விதித்து தீர்ப்பு

திருப்பூர் பலவஞ்சிபாளையம் டாஸ்மாக் பார் ஊழியர் கார்த்திகேயனை பணம் கேட்டு மிரட்டி மதுபாட்டிலால் தாக்கிய செட்டிப்பாளையம் பகுதியை சேர்ந்த 2 இளைஞர்களுக்கு தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருப்பூர் முதன்மை சார்பு நீதிமன்றம் தீர்ப்பு.



திருப்பூர்: திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன்(25). இவர் திருப்பூர் பலவஞ்சிபாளையம் பகுதியில் உள்ள டாஸ்மாக் பாரில் ஊழியராக வேலை செய்து வந்தார்.

இந்நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு நவம்பர் 1ம் தேதி இரவு செட்டிபாளையம் அருகே நடந்து சென்ற போது அங்கு வந்த அப்பகுதியை சேர்ந்த மகாராஜா(25) மற்றும் பிரவீன்குமார்(20) ஆகியோர் இவரிடம் பணம் கேட்டு மிரட்டி உள்ளனர்.

அப்போது கார்த்திகேயன் பணத்தை கொடுக்க மறுத்துள்ளார். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்ட நிலையில் கோபமடைந்த மகாராஜா மற்றும் பிரவீன்குமார் ஆகியோர் தாங்கள் மறைத்து வைத்திருந்த பாட்டிலை உடைத்து கார்த்திகேயனை தாக்கியுள்ளனர். இதில் அவர் படுகாயம் அடைந்தார்.



இதுகுறித்து நல்லூர் காவல் நிலையத்தில் கார்த்திகேயன் அளித்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து மகாராஜா மற்றும் பிரவீன்குமார் இரண்டு பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.



இது தொடர்பான வழக்கு திருப்பூர் முதன்மை சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.

இதில் கொலை முயற்சி குற்றத்திற்காக மகாராஜா, பிரவீன் குமார் ஆகியோருக்கு தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தும், 1000 ரூபாய் அபராதம் விதித்தும் நீதிபதி செல்லதுரை தீர்ப்பளித்தார்.

இந்த வழக்கில் அரசு தரப்பில் அரசு வழக்கறிஞர் பஷீர் அகமது ஆஜராகி வாதாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...