போலி நிறுவனங்களை தொடங்கி வெளிநாட்டு கிரெடிட் கார்டு மூலம் ரூ.43.75 லட்சம் மோசடி - 5 ஆண்டுகளுக்கு பின் 2 பேர் கைது

போலி நிறுவனங்களை தொடங்கி, சீனா மற்றும் அயர்லாந்து நாட்டு கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி ரூ.43.75 லட்சம் மோசடியில் ஈடுபட்டு 5 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த கோவையை சேர்ந்த இருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.


கோவை: கோவை மாவட்டம் ரத்தினபுரி பகுதியை சேர்ந்தவர் மனோகரன் மற்றும் டாடாபாத் பகுதியை சேர்ந்தவர் தேவராஜ். இவர்கள் இருவரும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு போலியாக நிறுவனங்களை தொடங்கியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அந்த நிறுவனங்களுக்கு தனியாக வங்கி கணக்கு தொடங்கியதுடன் கிரெடிட் கார்டு மற்றும் ஏ.டி.எம் கார்டுகளை ஸ்வைப் செய்யும் இயந்திரங்களை சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் பெயரில் வாங்கியுள்ளனர்.

இதனையடுத்து அவர்கள் இருவரும் வெளிநாட்டு கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி பண மோசடியில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக சீனா மற்றும் அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த கிரெடிட் கார்டுகளை பெற்று அதனை மேற்கண்ட ஸ்வைப் இயந்திரங்களை பயன்படுத்தி 43 லட்சத்து 76 ஆயிரம் ரூபாய் பணத்தை தங்கள் நிறுவனங்களின் வங்கிக் கணக்கில் மாற்றி மோசடி செய்துள்ளனர்.

அதன் பின்னர் அவர்கள் இருவரும் தலைமறைவான நிலையில், இதுகுறித்து கடந்த 2017 ஆண்டு சம்பந்தப்பட்ட கிரெடிட் கார்டு வங்கி அதிகாரிகள் கோவை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் ஐந்து ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த தேவராஜ், மனோகரன் ஆகிய இருவரையும் சைபர் கிரைம் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் இந்த மோசடி சம்பவத்தில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா ? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...