நீலகிரி பந்திப்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் லாரி மோதி பெண் யானை உயிரிழப்பு

நீலகிரி அடுத்த பந்திப்பூர் அருகே கூடலூர் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் நேற்றிரவு மைசூர் நோக்கி சென்ற லாரி மோதியதில் 30 வயது மதிக்கத்தக்க பெண் காட்டு யானை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.



நீலகிரி: à®¨à¯€à®²à®•ிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தையொட்டி பந்திப்பூர் புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. இந்த காப்பகத்தின் வழியாக தமிழகம் மற்றும் கேரளா மாநிலங்களை இணைக்க கூடிய தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளன.

இந்த தேசிய நெடுஞ்சாலைகளில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. குறிப்பாக கேரளா, கர்நாடகா செல்லும் கனரக வாகனங்கள் கக்கநல்லா மற்றும் முத்தங்கா சாலைகளை அதிகமாக பயன்படுத்தி வருகின்றன.



இந்நிலையில் à®¨à¯‡à®±à¯à®±à¯ இரவு கேரளாவில் இருந்து à®®à¯à®¤à¯à®¤à®™à¯à®•ா வழியாக à®®à¯ˆà®šà¯‚ர் நோக்கிச் சென்ற கோவை பதிவு எண் கொண்ட லாரி பந்திப்பூர் புலிகள் காப்பகத்தின் அருகே சாலையை கடக்க முயன்ற 30 வயது மதிக்கத்தக்க பெண் யானை மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் பெண் யானை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற பந்திப்பூர் வனத்துறையினர் லாரியை பிடித்து வைத்துள்ளதுடன் யானையை பிரேத பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்த தேசிய நெடுஞ்சாலையில் இரவு 9 மணி முதல் அதிகாலை 6 மணி வரை வாகன போக்குவரத்துக்கு  தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் லாரி மோதி யானை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...