தைப்பூசத்தையொட்டி ஜன.15 முதல் பொள்ளாச்சியில் இருந்து பழனிக்கு சிறப்பு ரயில் இயக்க வேண்டும் - பொள்ளாச்சி எம்.பி கு.சண்முகசுந்தரம்

ரயில்வே சேர்மன் V.K.திரிப்பாத்தியை சந்தித்து உடுமலை, பொள்ளாச்சி பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் காய்கறிகள், தென்னை சார்ந்த பொருட்களை வெளிமாநிலங்களுக்கு எடுத்து செல்ல பொள்ளாச்சியில் கிசான் ரயில் திட்டம் தொடங்க வேண்டும் எனவும் வலியுறுத்தல்.


கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினரான கு. சண்முக சுந்தரம், ரயில்வே சேர்மன் V.K.திரிப்பாத்தியை நேரில் சந்தித்தார்.

அப்போது, தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு கோவை, பொள்ளாச்சியில் இருந்து பழனிக்கு வரும் ஜனவரி 15ஆம் தேதி முதல் சிறப்பு ரயிலை இயக்க வேண்டும் வலியுறுத்தினார்.

மேலும், உடுமலை, பொள்ளாச்சி மற்றும் கிணத்துக்கடவு சுற்று வட்டார பகுதிகளில் விளைகின்ற தேங்காய், இளநீர் அனைத்து வகையான காய்கறிகள் மற்றும் தென்னை நார் சார்ந்த பல்வேறு பொருட்கள் தயாரிக்கப்படுகிறது.

இந்த பொருட்களை குறைந்த செலவில் மும்பை, டெல்லி போன்ற வெளி மாநிலங்களுக்கு கொண்டு செல்ல உதவும் வகையில், கிசான் ரயில் திட்டத்தை பொள்ளாச்சியில் தொடங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...