திருப்பூரில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட 3 பேர் கொண்ட கும்பல் - 300 சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து பிடித்த போலீசார்..!

பல்லடம் அருகே 2 இடங்களில் வீடுபுகுந்து 19 சவரன் நகைகளை கொள்ளையடித்த 3 பேர் கொண்ட கும்பலை 300 சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து பிடித்த போலீசார் அவர்களிடம் இருந்து 16 சவரன் நகைகளை பறிமுதல் செய்துள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த சுப்ரமணியம் (58). இவர் கடந்த அக்டோபர் 1ஆம் தேதி வெளியூர் சென்றிருந்த போது அவரது வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த 12 சவரன் நகையை அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

அதேபோல் நவம்பர் மாதம் எலவந்தி வடுகபாளையம் பகுதியை சேர்ந்த பழனிச்சாமி (62) என்பவரது வீட்டின் மேற்கூரையை உடைத்து 7 சவரன் நகையை கொள்ளையடித்துச் சென்றனர். இந்த இரண்டு கொள்ளை சம்பவம் தொடர்பாக காமநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் போலீசார் கொள்ளையடிக்கப்பட்ட வீடு மற்றும் அருகில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது 3 பேர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதனையடுத்து கொள்ளையர்களை சிசிடிவி கேமரா மூலம் தொடர்ந்த போலீசார் பல்லடம், திருப்பூர், கரூர் என 300 சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து கேத்தனூர் அருகே 3 பேரும் இருப்பதை கண்டறிந்தனர்.

இதனை தொடர்ந்து, காமநாயக்கன்பாளையம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் குழந்தைவேல் உள்ளிட்ட போலீசார் 3 பேரையும் சுற்றி வளைத்து பிடித்தனர். மேலும் அவர்களிடமிருந்த 16.5 சவரன் நகை மற்றும் கொள்ளையடிக்க பயன்படுத்திய இருசக்கர வாகனம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.

இதனையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த பாலசங்கர்(40), தேனி மாவட்டத்தை சேர்ந்த செந்தில் குமார் (39), மற்றும் 16 வயது சிறுவன் ஒருவனும் அதில் இருப்பதும் தெரியவந்தது,

இந்த கொள்ளை கும்பல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 15க்கும் மேற்பட்ட இடங்களில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து கைது செய்யப்பட்ட மூவரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...