கோவை கிணத்துக்கடவு மக்கள் தொடர்பு முகாமில் ரூ.4.53 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஆட்சியர்

கிணத்துக்கடவில் நடைபெற்ற மாவட்ட ஆட்சியரின் மக்கள் தொடர்பு முகாமில் ரூ.4.53 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 486 பயனாளிகளுக்கு வழங்கிய மாவட்ட ஆட்சியர் சமீரன் மக்களிடம் கோரிக்கை மனுக்களையும் பெற்றுக்கொண்டார்.



கோவை: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகேயுள்ள சொக்கனூரில் கோவை மாவட்ட ஆட்சித் தலைவரின் மக்கள் தொடர்பு முகாம் இன்று நடைபெற்றது.



கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் சமீரன் தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில் கால்நடை துறை,சமூக நலத்துறை, வேளாண்மை துறை, தோட்டக்கலை துறை மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் அமைக்கப்பட்ட கண்காட்சியை மாவட்ட ஆட்சித் தலைவர் பார்வையிட்டார்.



இதைத்தொடர்ந்து நடைபெற்ற முகாமில் 486 பயனாளிகளுக்கு 4 கோடியை 53 லட்சத்து 64 ஆயிரத்து 985 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.



பின்னர் கல் குவாரிகளால் ஏற்படும் பிரச்சனைகள், இலவச வீட்டு மனை பட்டா போன்ற கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் வழங்கினர்.



இந்த முகாமில் பொள்ளாச்சி சார் ஆட்சியர் பிரியங்கா, மாவட்ட ஊராட்சிகளின் துணை இயக்குனர் கமலக்கண்ணன், ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராதாகிருஷ்ணன், சிக்கந்தர் பாட்ஷா, சொக்கனூர் ஊராட்சி மன்ற தலைவர் பிரபு என்ற திருநாவுக்கரசு, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...