திருப்பூரில் காதல் ஜோடி தற்கொலை - விருப்பப்படி வாழ விடாததால் தற்கொலை முடிவு எடுத்ததாக கடிதம்: போலீசார் விசாரணை

திருப்பூரில் வாடகை வீட்டில் தங்கி இருந்த மதுரையை சேர்ந்த காதல் தம்பதியினர் தங்களின் விருப்பப்படி வாழ விடவில்லை என கடிதம் எழுதி வைத்துவிட்டு, விஷமருந்தி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



திருப்பூர்: மதுரை மாவட்டம் திருமங்கலத்தை சேர்ந்தவர் மாரி(20). இவர் அதேபகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இதனிடையே இவர்கள் இருவரும் உறவு முறையில் அண்ணன் தங்கை என்பதால் இவர்கள் காதல் விவகாரம் இவர்களது வீட்டிற்கு தெரிய வரவே இருவரது உறவினர்களும் இவர்களை பிரித்து வைத்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தங்கள் விருப்பப்படி வாழ வேண்டும் என்பதற்காக கடந்த ஐந்தாம் தேதி மதுரையில் உள்ள தங்கள் வீட்டை விட்டு வெளியேறிய இருவரும் திருப்பூர் வந்து கடுக்கார் தோட்டம் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி உள்ளனர். மேலும் வாழ்வாதாரத்திற்காக அருகில் உள்ள கட்டட வேலைக்கு இருவரும் சென்று வந்துள்ளனர்.

இந்நிலையில், இவர்கள் இருவரையும் காணவில்லை என சீதாவின் பெற்றோர் மதுரை திருமங்கலத்தில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்த நிலையில் சீதாவின் தொலைபேசியின் மூலம் அவரது உறவினர் அழைத்து மதுரை வர வற்புறுத்தி உள்ளதாக தெரிகிறது.

இதனால் மீண்டும் தங்களது உறவினர்கள் தங்களை பிரித்து விடுவார்கள் என்ற அச்சத்தினால் நேற்று இரவு இருவரும் விஷம் அருந்திவிட்டு, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இன்று காலை வீடு திறக்கப்படாமல் இருந்த நிலையில் வீட்டின் உரிமையாளர் சென்று பார்த்தபோது இருவரும் சடலமாக கிடப்பது தெரியவந்தது.

உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்த நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த நல்லூர் காவல்துறையினர் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதனை தொடர்ந்து, வீட்டில் இவர்கள் எழுதி வைத்திருந்த கடிதத்தையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். அதில் தாங்கள் இருவரும் விருப்பப்படி வாழ திருப்பூர் வந்தோம்.

எங்களின் இந்த முடிவுக்கு சில பேர் காரணம். 100 வருடம் வாழ விருப்பப்பட்டோம் ஆனால், வேறு வழியில்லாமல் இந்த முடிவு எடுத்திருக்கிறோம் என கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மதுரையை சேர்ந்த காதல் ஜோடி திருப்பூரில் வந்து தங்கியிருந்த நிலையில், விருப்பப்படி வாழ விடாததால், இருவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...