மோசமான வானிலையால் இன்றும், நாளையும் மேட்டுப்பாளையம் - உதகை இடையே ரயில் சேவைகள் ரத்து

நீலகிரி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக தண்டவாளங்களில் மண்சரிவு மற்றும் மரங்கள் முறிந்து விழுந்துள்ளதால் இன்றும் நாளையும் மேட்டுப்பாளையம் - உதகமண்டலம் இடையே இரு வழித்தடங்களிலும் ரயில் சேவ ரத்து செய்யப்பட்டுள்ளது.



கோவை: நீலகிரி மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த கனமழையால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. கல்லாறு - குன்னூர் இடையே நீலகிரி மலை ரயில் பாதையின் சில பகுதிகள் சேற்றால் மூடப்பட்டன.

பாறைகள் உருண்டு தண்டவாளத்தில் விழுந்துள்ளன. காற்று மற்றும் மழையால் வேரோடு சாய்ந்த மரங்களும் தண்டவாளத்தின் குறுக்கே விழுந்துள்ளன. இதனால் மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையே ரயில் போக்குவரத்து தடைபட்டுள்ளது.

இவற்றைக் கருத்தில் கொண்டு மேட்டுப்பாளையம் - உதகமண்டலம் - மேட்டுப்பாளையம் ரயில் சேவைகள் இன்றும் நாளையும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

அதன்படி ரயில் எண்.06136 மேட்டுப்பாளையம் - உதகமண்டலம் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது.

இதேபோல் ரயில் எண்.06137 உதகமண்டலம் - மேட்டுப்பாளையம் ரயில் சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இருப்பினும் குன்னூர் - உதகமண்டலம் இடையே என்எம்ஆர் ரயில் சேவை திட்டமிட்டபடி இயக்கப்படும்.

மோசமான வானிலை மற்றும் பாதகமான சூழலையும் மீறி சேதமடைந்த ரயில் பாதையை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...