கோவையில் எஸ்.பி.ஐ வங்கியின் கடன் வழங்கும் முகாமை தொடங்கி வைத்த கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன்

கோவை ரயில் நிலையம் அருகே ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா சார்பில் இன்றும், நாளையும் நடைபெறும் கடன் வழங்கும் முகாமின் தொடக்க விழாவில் ஆட்சியர் சமீரன் பங்கேற்று ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்.



கோவை: கோவை ரயில் நிலையம் அருகில் உள்ள குறிஞ்சி காம்ப்ளக்சில் உள்ள ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி வளாகத்தில் கடன் வழங்கும் முகாமின் தொடக்க விழா நடைபெற்றது. இந்த விழாவில், கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் பங்கேற்று முகாமை ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்.



இந்த முகாமானது இன்றும் நாளையும் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கடன் முகாமில், அரசு நிதியுதவி பெறும் திட்டங்களுக்கு கடன், இளம் தொழில் முனைவோருக்கான Standup India & Mudra திட்டங்கள், மத்திய மற்றும் மாநில அரசின் மானியத்துடன் கூடிய PMEGP, NEEDS முதலான திட்டங்கள், மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் திட்டங்கள் வழங்கப்படுகின்றன.



மேலும், விவசாய அபிவிருத்தி திட்டங்கள், வேளாண் உட்கட்டமைப்பு திட்டங்கள், பிரதான் மந்திரி உணவு பதப்படுத்தும் தொழில் திட்டங்கள், மாணவர்களுக்கான கல்விக் கடன் மற்றும் ஏராளமான அரசு கடன் திட்டங்களின் கீழ் கடன் வழங்கப்படுகிறது. கடன் முகாமில் தகுதி பெற்றவருக்கு உடனடி கடன் ஒப்புதல்கள் வழங்கப்படும்.

இந்தக் கடன் முகாமில், மாவட்ட தொழில் மையம், மகளிர் திட்டம், KVIC, NABARD, வேளாண் துறை, தமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு வாரியம், ஆவின், வேளாண்மை சந்தைப்படுத்துதல் மற்றும் வேளாண்மை வர்த்தகத் துறை, வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம், கரும்பு உற்பத்தி மையம், வானவராயர் வேளாண்மை கல்லூரி, உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் பங்கு பெற்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...