கோவையில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் ஆதரவற்றோர் தங்கும் விடுதிக்கான பூமி பூஜை - மாநகராட்சி துணை ஆணையாளர் ஷர்மிளா தொடங்கி வைத்தார்

கோவை கடலைகாரசந்து பகுதியில் மாநகராட்சி சார்பில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிதாக அமைய உள்ள ஆதரவற்றோர் தங்கும் விடுதிக்கான பூமி பூஜையை மாநகராட்சி துணை ஆணையாளர் ஷர்மிளா தொடங்கி வைத்தார்.



கோவை: கோவை கடலைகாரசந்து பகுதியில் புதிதாக அமைய உள்ள ஆதரவற்றோர் தங்கும் விடுதி கட்டிடத்திற்கான பூமி பூஜையை மாநகராட்சி துணை ஆணையாளர் ஷர்மிளா முன்னிலையில் நடைபெற்றது.

மத்திய அரசின் "தீன்தயால் அந்தயோத்திய யோஜனா" தேசிய நகர்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ் கோவை மாநகராட்சி பகுதிகளில் சுற்றித் திரியும் ஆதரவற்றோருக்கான தங்கும் விடுதி கட்ட திட்ட மதிப்பீடு மாநகராட்சி சார்பில் வழங்கப்பட்டது.

இந்நிலையில் கோவை மாநகராட்சியின் 83 ஆவது வார்டுக்கு உட்பட்ட கடலைகாரர் சந்து பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் சுமார் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் ஆதரவற்றோர் தங்கும் விடுதி அமைப்பதற்கான கட்டுமான பணிகள் இன்று பூமி பூஜையுடன் துவங்கியது.

மாநகராட்சி துணை ஆணையாளர் ஷர்மிளா முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மத்திய மண்டல தலைவர் மீனா லோகு, சுகாதாரத்துறை குழு தலைவர் மாரிச்செல்வன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...