நீலகிரி அருகே காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த 4 பேரின் குடும்பத்தினரை திமுக எம்.பி ஆ.ராசா, அமைச்சர் கா.ராமச்சந்திரன் நேரில் சந்தித்து ஆறுதல் - நிவாரண உதவியையும் வழங்கினர்

நீலகிரி அருகே கோவிலுக்கு சென்று திரும்பிய போது காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த 4 பெண்களின் குடும்பத்தினரை திமுக எம்.பி ஆ.ராசா, அமைச்சர் கா.ராமச்சந்திரன் நேரில் ஆறுதல் தெரிவித்து, அரசு அறிவித்த ரூ.4 லட்சம் நிவாரண நிதியுடன், ஆ.ராசா தமது சார்பில் தலா ஒரு லட்சத்தையும் வழங்கினார்.



நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள ஆனிக்கல் பகுதியில் கோவிலுக்கு சென்று திரும்பியபோது காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி 4 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்நிலையில் உயிரிழந்த 4 பேரின் குடும்பங்களுக்கும் தலா 4 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.



இந்நிலையில், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா மற்றும் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் ஆகியோர் உயிரிழந்த 4 பேரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து, மாநில பேரிடர் மேலாண்மை நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.4 லட்சத்திற்கான காசோலையை குடும்பத்தினரிடம் வழங்கினர். இந்நிலையில், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, தனது சார்பில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா 1 லட்சம் ரூபாய் 4 லட்சம் ரூபாயையும் வழங்கினார்.

இதையடுத்து ஆ.ராசா செய்தியாளர்களிடம் பேசியதாவது, நீலகிரி மாவட்டம் உதகை அருகே கோவிலுக்கு சென்று திரும்பி வரும் பொழுது ஒரு சிறிய ஓடையை கடக்க முயன்ற சரோஜா(65), வாசுகி(45), விமலா(35), சுசீலா(50) ஆகிய நான்கு பேரும் வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டு பின்னர் சடலமாக மீட்கப்பட வேண்டிய துயர சூழ்நிலை ஏற்பட்டது வருத்தம் அளிக்கிறது.

நீலகிரி மாவட்ட ஆட்சியர் தலைமையில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு நால்வரின் சடலமும் மீட்கப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில், முதலமைச்சர் உத்தரவின் பேரில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா 4 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் அம்ரித், முன்னாள் அரசு கொறடா பா.மு.முபாரக், உதகை வருவாய் கோட்டாட்சியர் துரைசாமி, உதகை வட்டாட்சியர் ராஜசேகர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விஜயா மற்றும் நந்தகுமார் உட்பட அரசுத்துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...