கோவை ராமநாதபுரம் பகுதியில் அழுகிய நிலையில் 22 வயது இளைஞர் சடலமாக மீட்பு - போலீசார் விசாரணை….!

கோவை ராமநாதபுரம், கணேஷபுரம் பகுதியில் உள்ள வீட்டில் வாடகைக்கு தங்கியிருந்த திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையத்தை சேர்ந்த கார்த்திக் (22) என்பவர் வீட்டில் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.


கோவை: திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையத்தை சேர்ந்தவர் கார்த்திக் (22). இவர் கோவை ராமநாதபுரம், கணேஷபுரம் பகுதியில் உள்ள வீட்டில் வாடகைக்கு தங்கியிருந்துள்ளார்.

கடந்த மூன்று நாட்களாக வீட்டின் கதவு திறக்காமல் இருந்த நிலையில், இன்று வீட்டில் இருந்து கடும் நுர்நாற்றம் வீசியதாக தெரிகிறது. இதையடுத்து, அக்கம் பக்கத்தினர் ராமநாதபுரம் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.

சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, கார்த்திக் அழுகிய நிலையில் சடலமாக கிடந்துள்ளார். இதையடுத்து, உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் கார்த்திக் சடலமாக மீட்கப்பட்ட இடத்தின் அருகே விஷம் பாட்டில் கைப்பற்றப்பட்டது. முதல் கட்ட விசாரணையில், கடந்த வாரம் திருப்பூரில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்ற கார்த்திக், அங்கு பெற்றோர்களுடன் ஏற்பட்ட சண்டையால் கோபித்து கொண்டு வந்தது தெரியவந்தது.

சம்பவம் தொடர்பாக ராமநாதபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...