சூலூர் வாரப்பட்டியில் ராணுவ தளவாட தொழிற்சாலை அமைக்க எதிர்ப்பு - காத்திருப்பு போராட்டத்தை தொடங்கிய விவசாயிகள்

சூலூரில் அமைக்கப்பட உள்ள ராணுவ தளவாட உற்பத்தி தொழிற்சாலைக்கு விவசாய நிலங்களை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் உட்பட விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.



கோவை: கோவை மாவட்டம் சூலூர் பகுதிக்கு உட்பட்ட வாரப்பட்டி ஊராட்சியில் டிட்கோ சார்பில் ராணுவ தளவாடங்கள் உற்பத்தி தொழிற்சாலை அமைக்க நிலம் கையகப்படுத்தப்பட்டு வருவதாக கூறி அப்பகுதி மக்கள் பல நாட்களாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.



ஏற்கனவே, இப்பகுதியில் சிட்கோ அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. இந்நிலையில், அதே இடத்தில் இப்போது ராணுவ தளவாட உற்பத்தி தொழில் கூடம் அமைய உள்ள இடத்திற்கு அருகே தனியார் இடத்தில் பந்தல் அமைத்து அப்பகுதி கிராம மக்கள் தொடர் காத்திருப்பு போராட்டத்தை இன்று முதல் தொடங்கியுள்ளனர்.



போராட்டத்திற்கு, டெல்லி விவசாய போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த அகில இந்திய விவசாயிகள் சங்க தலைவர் ராகேஷ் தியாகத் மற்றும் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க தலைவர் ஈசன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.



விவசாயிகள் மற்றும் பெண்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட போராட்டத்தில், ராணுவ தளவாட தொழிற்சாலை அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும், அதேபோல, அரசு ராணுவ தளவாடம் அமைப்பது தொடர்பான தெளிவான அறிக்கை அளிக்கும் வரை தொடர்ந்து போராட்டமானது நடைபெறும் என கண்டன முழக்கங்கள் எழுப்பினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அகில இந்திய விவசாயிகள் சங்க தலைவர் ராகேஷ் தியாகத், விவசாயிகளிடம் இருந்து குறைந்த விலைக்கு நிலங்களைப் கைப்பற்றி தொழிற்சாலை அமைப்பதற்காக கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அதிக விலைக்கு விற்று வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

இதற்கு விவசாயிகள் ஒரு போதும் அனுமதிக்க கூடாது. உயிர் இருக்கும் வரை நமது மண்ணையும் நமது பூமியும் காக்க விவசாயிகள் போராட வேண்டும். விவசாயிகள் முன்னெடுக்கும் அனைத்து போராட்டங்களுக்கும் அகில இந்திய விவசாயிகள் சங்கம் உறுதுணையாக இருக்கும் என்று தெரிவித்தார்.



காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண்கள் பேசுகையில், விவசாயத்தையும் விவசாய நிலங்களையும் சீரழிக்கும் திட்டத்தை ஒரு போதும் இப்பகுதி கிராம மக்கள் அனுமதிக்க மாட்டோம். அரசு உடனடியாக இதுகுறித்து நடவடிக்கை எடுத்து தெளிவான விளக்கம் கொடுக்கும் வரை தொடர் காத்திருப்பு போராட்டம் தொடரும் என்று தெரிவித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...