கோவை ஈச்சனாரி தனியார் கல்லூரி அருகே கஞ்சா விற்பனை - கல்லூரி மாணவர் உட்பட 3 பேர் கைது…!

ஈச்சனாரியில் உள்ள தனியார் கல்லூரி அருகே மாணவர்களை குறி வைத்து கஞ்சா விற்பனை செய்வதாக தனிப்படை போலீஸாருக்கு கிடைத்த கசிய தகவலின் படி, தனிப்படை உதவி ஆய்வாளர் குப்புராஜ் தலைமையிலான போலீசார் மூவரை கைது செய்தனர்.



கோவை: கோவை ஈச்சனாரி அருகே கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த கல்லூரி மாணவர் உட்பட மூவரை மதுக்கரை தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.

கோவை மாவட்டம் முழுவதும் கஞ்சா மற்றும் குட்கா பொருட்கள் விற்பனையை தடுக்க மாவட்ட போலீஸார் தனிப்படை அமைத்து கண்காணிப்பை தீவிரபடுத்தியுள்ளனர்.

இந்நிலையில், கோவை ஈச்சனாரி தனியார் கல்லூரி அருகே கல்லூரி மாணவர்களை குறி வைத்து கஞ்சா விற்பனை நடப்பதாக தனிப்படை போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

இதையடுத்து சாதாரண உடையில் சென்ற தனிப்படை உதவி ஆய்வாளர் குப்புராஜ் தலைமையிலான போலீஸார் அங்கு சந்தேகத்திற்கிடமான நின்றுக் கொண்டிருந்த 3 இளைஞர்களை பிடித்து விசாரித்தனர்.

விசாரனையின் போது, முன்னுக்குபின் முரணாக பதிலளித்ததால் சந்தேகமடைந்த போலீஸார் அவர்களை சோதனை செய்த போது கஞ்சா மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

முதல் கட்ட விசாரணையில், பிடிபட்ட நபர்கள் தென்காசியை சேர்ந்த மகேந்திரன் (22), சுப்பிரமணியன் (23), மற்றும் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த அண்ணாமலை (21) என்பது தெரியவந்தது.

இதில் மகேந்திரன், சுப்பிரமணி இருவரும் கோவை ஹோப்ஸ் பகுதியில் தங்கி இரு சக்கர வாகன டேக்ஸி ஓட்டிக் வருகின்றனர் என்பதும் அண்ணாமலை, தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.

இதையடுத்து மூவரையும் கைது செய்த போலீஸார் அவர்களிடமிருந்த சுமார் 2.1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதையடுத்து மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...