பொள்ளாச்சியில் நிதி நிறுவனத்தில் 10 லட்சம் மோசடி செய்த கலெக்சன் ஏஜென்ட் கைது - குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை

வாகனங்களுக்கு கடனுதவி வழங்கும் நிதி நிறுவனத்தில் பணியில் இருந்த, மாதத் தவணை வசூல் செய்யும் ஊழியர், ரூ.10.12 லட்சத்தை கையாடல் செய்த குற்றத்துக்காக அவர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி வெங்கடேசா காலனியில் அம்மன் நிதி நிறுவனம் என்ற தனியார் நிதி நிறுவனம் இயங்கி வருகின்றது. இந்த நிதி நிறுவனத்தில், 2 சக்கர வாகனங்கள், 4 சக்கர வாகனங்களுக்கு ஏஜெண்ட் மூலம் மற்றும் தனி நபர்களுக்கு கடன் உதவி செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் நெகமம் கள்ளிப்பட்டியை சேர்ந்த விவேகானந்தன் (31) என்பவர் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் விற்பனை பிரதிநிதியாக அந்த நிதி நிறுவனத்தில் சேர்ந்திருக்கின்றார். மாதந்தோறும் வாடிக்கையாளர்களிடம் இருந்து தவணையை வசூலித்து நிதி நிறுவனத்தில் செலுத்துவது தான் இவரது பணி.

இந்தநிலையில், கடந்த ஜூலை மாதம் 27-ந் தேதியில் இருந்து விவேகானந்தன் வேலைக்கு வராமல் இருந்துள்ளார். தொடர்ச்சியாக அவரை தொடர்பு கொண்டபோது செல்போன் சுவிட்ச் ஆப் ஆன நிலையில் இருந்துள்ளது.

இதனால், சந்தேகமடைந்த நிதி நிறுவனத்தினர், நிதி நிறுவன கணக்குகளை தணிக்கை செய்தனர். அப்போது நிதி நிறுவனத்தில் ரூ.10.12 லட்சத்து விவேகானந்தன் கையாடல் செய்தது தெரியவந்தது. இதைப்பார்த்து, அதிர்ச்சியடைந்த நிதி நிறுவன இயக்குனர் ராம்குமார் உடனே இதுதொடர்பாக கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில், மாவட்ட எஸ்.பி பத்ரிநாராயணன் உத்தரவின்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி விசாரணை நடத்தினார். விசாரணையில், நிதி நிறுவனத்தில் பணி புரிந்து வந்த விவேகானந்தன் ரூ.10 லட்சத்து 12 ஆயிரத்தை மோசடி செய்தது தெரியவந்தது.

இதையடுத்து, விவேகானந்தன் மீது மோசடி உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து தலைமறைவாக இருந்த அவரை போலீசார் கண்டுபிடித்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...