தொண்டு நிறுவனம் மூலம் கோவைக்கு ஒரு நாள் சுற்றுலா வந்த பள்ளி மாணவர்கள் மற்றும் திருநங்கைகள் - நேரில் சென்று வரவேற்ற ஆட்சியர் சமீரன்

சென்னையை சேர்ந்த தொண்டு நிறுவனம் உதவியுடன் விமானம் மூலம் கோவைக்கு வந்த அரசு பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் திருநங்கைகளை விமான நிலையத்தில் ஆட்சியர் சமீரன், மாநகராட்சி ஆணையர் பிரதாப் ஆகியோர் வரவேற்றனர்.


கோவை: சென்னையில் உள்ள Rain Drops என்ற தொண்டு நிறுவனத்தின் சார்பில் சென்னையில் இருந்து அரசு பள்ளி மாணவ மாணவியர்கள் மற்றும் திருநங்கைகளை கோயம்புத்தூர் வரை முதல் முறை விமானம் மூலம் பயணம் மேற்கொண்டு ஒரு நாள் கோவை மாவட்டத்தில் உள்ள முக்கிய இடங்களை பார்வையிடுவதற்காக அழைத்து சென்றுள்ளனர்.



இந்நிலையில், கோவைக்கு வருகை தந்துள்ள அரசு பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் திருநங்கைகளை கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன், கோவை மாநகராட்சி ஆணையர் பிரதாப் ஆகியோர் கோவை விமான நிலையத்தில் வரவேற்றனர்.



ஒரு நாள் சுற்றுப்பயணமாக வந்துள்ள அரசு பள்ளி மாணவ மாணவியர் மற்றும் திருநங்கைகள் கோவை மாவட்டத்தில் உள்ள அருங்காட்சியகம், பூங்கா ஆகியவற்றை பார்வையிட உள்ளதாக கூறப்படுகிறது.



இந்த வரவேற்பு நிகழ்வின் போது கோவை மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் பூமா மற்றும் NGO நிறுவன பிரதிநிதிகள் உடன் இருந்தனர். இந்த நிகழ்வில் குக் வித் கோமாளி பிரபலம் சிவாங்கியும் மாணவர்களுடன் வருகை புரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...