கோவை கணபதி அருகே முறையாக ஊதியம் வழங்காத காண்டிராக்டரை கண்டித்து பணி புறக்கணிப்பில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள்

கணபதி அருகே முறையாக ஊதியம் தராத காண்டிராக்டர் நந்தகோபாலை கண்டித்து தூய்மை பணியாளர்கள் பணி புறக்கணிப்பில் ஈடுபட்ட நிலையில், துணை ஆணையர் இன்றே காசோலை வழங்கப்படும் என உறுதி அளித்தையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.


கோவை: கோவை மாநகராட்சி உட்பட்ட பகுதியில் காண்டிராக்டர்கள் மூலம் தூய்மை பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டு வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில், நந்தகோபால் என்ற காண்டிராக்டர், தூய்மை பணியாளர்கள் முறையாக ஊதியம் வழங்கவில்லை என கூறப்படுகிறது.



இதனை கண்டித்து, கோவை மாவட்டம் கணபதி பகுதியில் உள்ள சூர்யா மருத்துவமனைக்கு முன்பு தூய்மை பணியாளர் நலக்குழு மற்றும் ஏ.ஐ.சி.டி.யு சங்கத்தினருடன் இணைந்து தூய்மைப் பணியாளர்கள் இன்று பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.



இந்த போராட்டத்தை தொடர்ந்து, வடக்கு மண்டல துணை ஆணையர் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில், தூய்மை பணியாளர்களுக்கு இன்றைய தினமே காசோலை வழங்கப்படும் என்றும், வரும் திங்கட்கிழமை தொழிலாளர்களுக்கு அவரவர் வங்கிக் கணக்கில் ஊதியம் வரவு வைக்கப்படும் எனவும் உறுதி அளிக்கப்பட்டது.



இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தூய்மை பணியாளர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த போராட்டம் காரணமாக அப்பகுதியில் சில மணி நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...