மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ மாணவியர்களுக்கு ஆட்சியர் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினர்

பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ மாணவியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் சமீரன் வழங்கி பாராட்டினார்.


கோவை: இன்று கோவை கிக்கானி மேல்நிலைப்பள்ளி கலையரங்கத்தில் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ மாணவியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் சமீரன் வழங்கி பாராட்டினார்.

பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் மாவட்ட அளவிலான கலைத் திருவிழாவில் பேச்சுப்போட்டி, கதை எழுததல், கட்டுரை போட்டி திருக்குறள் ஒப்புவித்தல், பாடல் ஒப்புவித்தல், ஒவியம் வரைதல் தனிநடனம், குழுநடனம், ஒயிலாட்டம், தேவராட்டம், கும்மியாட்டம், கேலிசித்திரம் வரைதல், நாட்டுப்புற நடனம், இலக்கிய நாடகம், சமூக நாடகம், வாத்திய கருவிகள் வாசித்தல் உள்ளிட்ட 178 வகையான போட்டிகள் நடத்தப்பட்டன.

இப்போட்டிகளில் 428 பள்ளிகளை சேர்ந்த 7966 மாணவ மாணவியர்கள் கலந்துகொண்டனர். இப்போட்டிகளில் 1899 மாணவ மாணவியர்கள் முதல், இரண்டாம், மூன்றாம் இடம் பெற்றனர்.



மேலும், அங்கு நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளை மாவட்ட ஆட்சியர் மாநகராட்சி ஆணையாளர் பார்த்து மகிழ்ந்தனர்.



வெற்றிபெற்ற அனைத்து மாணவ - மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை ஆட்சியர் வழங்கினார்.



குறிப்பாக, தொண்டாமுத்தூர் வட்டாரம், புதூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 7ம்வகுப்பு பயிலும் இரண்டு கைகள் மற்றும் கால்கள் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி மாணவன் நிர்மல் குமாரின் நடனத்தையும் தன்னம்பிக்கையும் பாராட்டி பரிசு மற்றும் சான்றிதழை வழங்கி மாணவனை ஆட்சியர் ஊக்குவித்தார்.

இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், பூபதி, மாவட்ட கல்வி அலுவலர்கள், கிக்காணி பள்ளி தலைமை ஆசிரியர், மற்றும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...