கோவையில் டாடா ஏஸ் வாகனம் சாலையில் கவிழ்ந்து விபத்து - கட்டிட வேலைக்கு சென்ற தொழிலாளி பலி - 5 பெண்கள் படுகாயம்

ஒண்டிப்புதூர் பகுதியில் இருந்து கிணத்துக்கடவு நோக்கி கட்டிட வேலைக்காக கான்கிரிட் மிக்ஸர் இயந்திரத்தை ஏற்றிக் கொண்டு, அதனுடன் பணியாளர்கள் அமர்ந்தவாறு சென்ற டாடா ஏஸ் வாகனம் செட்டிபாளையம் அருகே சென்ற போது விபத்துக்குள்ளானது.


கோவை: தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்தவர் காளியப்பன் (52), இவரது மனைவி மூக்கம்மாள் (47), மகன் அஜித்குமார், உறவினர்கள் சரிதா (35), சித்ரா(33) மற்றும் கலா (39). ஆகியோர் கோவை ஒண்டுப்புதூர் பகுதியில் தங்கி கட்டிட வேலை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் இருந்து கிணத்துக்கடவு நோக்கி கட்டிட வேலைக்காக கான்கிரிட் மிக்ஸர் இயந்திரத்தை ஏற்றிக் கொண்டு, அதனுடன் பணியாளர்கள் அமர்ந்தவாறு டாடா ஏஸ் வாகனத்தில் சென்றனர். வாகனத்தை அஜித்குமார் ஓட்டிச்சென்றார்.

அப்போது, சேலம் - கொச்சின் நெடுஞ்சாலை செட்டிபாளையம் மேம்பாலம் அருகே வந்த போது அஜித்குமார், அவர்கள் வாகனம் முன்னால் சென்ற வாகனத்தை முந்திச் செல்ல முயன்றதாக தெரிகிறது. கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் காளியப்பன், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், வாகனத்தில் சென்ற மூக்கம்மாள், சரிதா, கலா, சித்ரா ஆகியோர் படுகாயமடைந்தனர். இதையடுத்து அங்கிருந்தவர்கள் படுகாயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலென்ஸ் மூலம் தனியார் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த செட்டிபாளையம் போலீசார் காளியப்பன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் விபத்தில் சிக்கிய வாகனத்தை பொக்லைன் மூலம் அகற்றினர்.

விபத்து தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்தால், சுமார் 30 நிமிடத்திற்கு மேல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...