கோவை கோட்ட காவல் நிலையங்களில் மரக்கன்றுகள் நடவு…!

அனைத்து காவல் நிலைய உட்கோட்டங்களிலும் மரக்கன்றுகள் நடவு செய்ய டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டதையடுத்து, கோவையில் உள்ள 6 உட்கோட்டங்களிலும் போலீசார் மரக்கன்றுகளை நடவு செய்தனர்.


கோவை: கோவை மாவட்டம் முழுவதும் அனைத்து கோட்ட காவல் நிலையங்களில் காவல்துறை சார்பில் மரக்கன்றுகள் இன்று நடவு செய்யப்பட்டது.

தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவின் பேரில் அனைத்து காவல் நிலைய உட்கோட்டங்களிலும் காவல் துறை சார்பில் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்ட எஸ்.பி. பத்ரிநாராயணன் அறிவுறுத்தலின் பேரில் கோவையில் உள்ள 6 உட்கோட்டங்களில் போலீசார் மரக்கன்றுகளை நடவு செய்தனர்.

பேரூர் உட்கோட்டம் போத்தனூர் பகுதியில் உள்ள பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையம் மற்றும் காவலர்கள் குடியிருப்பில், மாவட்ட எஸ்.பி.பத்ரிநாராயணன் மரக்கன்றுகளை நடவு செய்தார்.

இதே போல, கோவையில் உள்ள மற்ற காவல் உட்கோட்டங்களிலும் மரக்கன்றுகள் நடவு செய்யும் பணி இன்று நடைபெற்றது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...