நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தை துவங்கிய மக்கள் நீதி மய்யம் - கோவையில் பொதுக்கூட்டத்துடன் துவக்கம்

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு மக்கள் நீதிமய்யம் கட்சியின் சார்பில் தமிழகம் முழுவதும் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ள நிலையில் முதல் பொதுக்கூட்டத்தை கோவையில் நடத்தி தொடங்கியுள்ளனர்.


கோவை: வரும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் பொதுக்கூட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

இதன் துவக்கமாக அக்கட்சியின் தலைவர் கமலஹாசன் போட்டியிட்ட கோவை தெற்கு தொகுதி காமராஜபுரம் பகுதியில் முதல் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மாற்று கட்சியை சேர்ந்த 110 பேர் மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தனர்.

இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.



இந்த கூட்டத்தில் மாநிலத் துணைத் தலைவர் தங்கவேலு, தலைமையில் மண்டல செயலாளர், ரங்கநாதன் முன்னிலையில் மத்திய மாவட்ட செயலாளர் பிரபு வரவேற்புரை ஆற்றினார்.



இதேபோல் மாநிலத் துணைத் தலைவர் மௌரியா மற்றும் இளைஞரணி மாநில செயலாளர் கவிஞர் சினேகன் ஆகியோரும் சிறப்பு உரையாற்றினர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...