குன்னூர் நஞ்சப்பசத்திரம் கிராமத்தில் ரூ.82 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர் கா.ராமச்சந்திரன்

குன்னூர் அருகே கடந்தாண்டு ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான நஞ்சப்பசத்திரம் பகுதியில் நடந்த அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் 153 பயனாளிகளுக்கு ரூ.82 லட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.


நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகேயுள்ள நஞ்சப்பசத்திரம் பகுதியில் கடந்த ஆண்டு டிசம்பர் 8ஆம் தேதி ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் முப்படை தளபதி பிபின் ராவத் உள்பட 14 பேர் உயிரிழந்தனர்.

விபத்தின் போது நஞ்சப்பச்சத்திரம் பகுதி மக்கள் மீட்பு பணியில் சிறப்பாக உதவி செய்ததை அடுத்து அந்த கிராம மக்களுக்கு தொடர்ந்து பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்யப்பட்டு வருகிறது.



இந்த நிலையில் இன்று தமிழக அரசு சார்பாக நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.



அதில் சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அம்ரித் உள்ளிட்டோர் கலந்து கொண்டு 153 பயனாளிகளுக்கு ரூ.82 லட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

இந்த நிகழ்ச்சியில் முன்னதாக சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் பேசியதாவது, கடந்த டிசம்பர் 8ஆம் தேதி ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத் மற்றும் அவர்களுடன் பயணித்த அவரது மனைவி மற்றும் வீரர்கள் மரணமடைந்தனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து, உடனடியாக தமிழக முதலமைச்சர் நேரடியாக நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தந்து முப்படை தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத் மற்றும் அவருடன் பயணித்து விபத்தில் மரணம், அடைந்தவர்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

இந்த துயர விபத்து ஏற்பட்ட போது உடனடியாக விபத்தில் சிக்கிய முப்படை தலைமை தளபதி மற்றும் வீரர்களை காப்பாற்றுவதற்காக நஞ்சப்பசத்திரம் பொதுமக்கள் தன்னலம் கருதாமல் தங்களது வீட்டில் உள்ள பெட்ஷீட் மற்றும் தீயை அணைப்பதற்கு தண்ணீர் போன்றவற்றை மாவட்ட நிர்வாகத்திற்கும், ராணுவ வீரர்களுக்கும் வழங்கி உதவி செய்து, மீட்புப்பணிகளிலும் ஈடுப்பட்டதற்கு தமிழக அரசின் சார்பில், நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

கிராம மக்களின் உதவியை அடுத்து வருவாய்த் துறையின் சார்பில் முதியோர் உதவித்தொகை, ஜாதி சான்று, குடும்ப அட்டைகளும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் 4 பயனாளிகளுக்கு தையல் இயந்திரங்களையும், மாற்றுத்திறனாளிகளின் நலத்துறையின் சார்பில் 2 பயனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் ஆகியவை வழங்கப்பட்டன.

தொடர்ந்து, 1 பயனாளிக்கு காது ஒலிக்கருவி, 1 பயனாளிக்கு பெட்டிக்கடை வைப்பதற்கான கடனுதவி என மொத்தம் 45 பயனாளிகளுக்கு ரூ.3.38 லட்சம் மதிப்பில் பல்வேறு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும், பொது சுகாதாரத் துறையின் சார்பில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்தின் கீழ் தலா ரூ.18 ஆயிரம், 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் மற்றும் நீரிழிவு நோய்களுக்கு இலவசமாக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, மக்களை தேடி மருத்துவ திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு மருந்து பெட்டகம் வழங்கப்பட்டன.

மேலும் தற்போது, 153 பயனாளிகளுக்கு ரூ.82 லட்சம் மதிப்பில் பல்வேறு துறைகளின் சார்பில் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்வில், திட்ட இயக்குநர்கள் ஜெயராமன் (ஊரக வளர்ச்சி முகமை), பால கணேஷ் (மகளிர் திட்டம்), குன்னூர் வருவாய் கோட்டாட்சியர் பூஷண குமார், தோட்டக் கலைத்துறை இணை இயக்குநர் (பொ) ஷிபிலா மேரி, துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) பாலுசாமி, மாவட்ட வழங்கல் அலுவலர் வாசுகி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மலர்விழி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சாம் சாந்தகுமார், குன்னூர் ஊராட்சி ஒன்றியத்தலைவர் சுனிதா நேரு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...