கோவையில் கார் மோதியதில் 2 நாய்கள் உயிரிழந்த சோகம் - ஓட்டுனர் மீது போலீசார் வழக்குப்பதிவு

ரத்தினபுரி அருகே ஆஸ்டின் என்பவர் தனது 2 நாய் குட்டிகளுடன் நடந்து சென்றபோது வேகமாக வந்த கார் மோதியதில், 2 நாய்களும் உயிரிழந்த நிலையில், ஓட்டுனர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: கோவை மாவட்டம் சேரன் மாநகர் பகுதியை சேர்ந்தவர் ஆஸ்டின். செல்லப்பிராணிகளை வளர்ப்பதில் ஆர்வம் கொண்ட இவர் தனது வீட்டில் நாய்கள் உள்ளிட்ட பல்வேறு செல்லப்பிராணிகளை ஆசையாக வளர்த்து வருகிறார்.

இந்த நிலையில், கோவை ரத்தினபுரி பகுதியில் தனது 2 நாய் குட்டிகளுடன் ஆஸ்டின் நடந்து சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக வேகமாக வந்த கார் ஒன்று, நாய்கள் மீது மோதியது.

இந்த விபத்தில் ஆஸ்டின் அழைத்து சென்ற இரண்டு நாய்களும் படுகாயமடைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தன. இதனை தொடர்ந்து, இச்சம்பவம் தொடர்பாக ஆஸ்டின் ரத்தினபுரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அவரது புகாரின் பேரில் காரை ஓட்டி வந்த ரத்தினபுரி பகுதியைச் சேர்ந்த பிரபு என்பவர் மீது ஐ.பி.சி 429/பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த பிரிவு வழக்குகளுக்கு 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்க கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

செல்லமாக வளர்த்த இரண்டு நாய்கள் விபத்தில் பலியான சம்பவத்தால் ஆஸ்டின் குடும்பத்தார் சோகத்தில் மூழ்கி இருக்கின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...