கோவை தடாகம் அருகே உலா வரும் யானை, காட்டெருமைகளால் பொதுமக்கள் அச்சம் - பாதுகாப்பாக இருக்க வனத்துறை அறிவுறுத்தல்..!

தடாகம் அருகேயுள்ள வனப்பகுதியில் இருந்து வெளியேறிய யானை மற்றும் காட்டெருமைகள் மாங்கரை குடியிருப்புக்கு அருகே உலா வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ள நிலையில், ஆடு மாடு மேய்ச்சலுக்காக செல்பவர்கள் பாதுகாப்பாக இருக்க வனத்துறை அறிவுறுத்தல்.



கோவை: கோவை ஆனைக்கட்டி, தடாகம் அருகே உள்ள வனப்பகுதியில் யானை, காட்டெருமை, மான் உள்ளிட்ட வன விலங்குகள் வனத்தை ஒட்டிய பகுதிகளில் மற்றும் மலைவாழ் பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் உலா வருவது வழக்கமான ஒன்றாக உள்ளது.

தடாகம் பள்ளத்தாக்கு 24 வீரபாண்டி வருவாய் கிராமத்துக்கு உட்பட்ட மாங்கரை பகுதிகளில் உணவு, தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிக்கு அருகே உள்ள ஓடை மற்றும் ஆறுகளுக்கு யானை, காட்டெருமைகள் படையெடுத்து உள்ளன.



இதன் காரணமாக வனவிலங்குகள் நடமாடும் பகுதியில் ஆடு மாடு மேய்ப்பவர்கள், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பாதுகாப்பாக இருக்க வனத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

மேலும், தற்போது மார்கழி மாதம் தொடங்கியுள்ளதால், பொதுவாகவே அனைத்து பகுதிகளிலும் மூடுபனி அதிகமாக உள்ளது. குறிப்பாக தடாகம் சாலையானது மலைப் பகுதியை ஒட்டி உள்ளதால் அங்கு அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் கடுமையான மூடுபனி காணப்படுகிறது.

யானை நடமாட்டம் உள்ளதால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகளை முகப்பு விளக்குகளை எரியவிட்டு, கவனத்துடன் செல்ல வேண்டும் என்று வனத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...