2022-ஆம் ஆண்டிற்கான ‘விஷ்ணுபுரம் விருது’ - எழுத்தாளர் சாரு நிவேதிதாவுக்கு வழங்கப்பட்டது

கோவை ஆர்.எஸ்.புரத்தில் நடைபெற்ற 2022-ஆம் ஆண்டிற்கான ‘விஷ்ணுபுரம் விருது’ வழங்கும் விழாவில், பிரபல எழுத்தாளர் சாரு நிவேதிதாவுக்கு விஷ்ணுபுரம் விருது மற்றும் ரூ.2 லட்சம் ரொக்கப் பரிசுடன் வழங்கப்பட்டது.


கோவை: நவீன தமிழ் இலக்கியத்திற்கு செழுமை சேர்த்த முன்னோடி படைப்பாளுமைகளைக் கவுரவிக்கும் விதமாக 'விஷ்ணுபுரம் விருது' கடந்த 2010ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.

கோவையை மையமாகக் கொண்டு செயல்படும் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் சார்பில் வழங்கப்படும் இந்த விருது கலையம்சம் மிக்க விருது சிற்பமும், பாராட்டுப் பத்திரமும், ரூ.2,00,000 விருதுத் தொகையை உள்ளடக்கியதாகும்.

இந்நிலையில், 2022-ஆம் ஆண்டிற்கான 13வது விஷ்ணுபுரம் விருது வழங்கும் விழா, கோவை ஆர்.எஸ்.புரம் தனியார் அரங்கில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில், விருது பெறும், எழுத்தாளர் சாரு நிவேதிதாவின் எழுத்தாளுமை குறித்த 'தி அவுட்சைடர்' என்ற ஆவணப்படம், எழுத்தாளர் அராத்துவின் இயக்கத்தில் திரையிடப்பட்டது.



மேலும், அவரது படைப்புலகம் குறித்து சக எழுத்தாளர்கள் எழுதிய நூலும் வெளியிடப்பட்டது.

இந்த நிகழ்வில் எழுத்தாளர்கள் அருணாச்சலப் பிரதேசத்தை சேர்ந்த எழுத்தாளர், கவிஞர் மமங் தாய், எழுத்தாளர் ஆர். காளிப்ரசாத், எழுத்தாளர் போகன் சங்கர், எழுத்தாளர் ஜெயமோகன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். இறுதியாக எழுத்தாளர் சாரு நிவேதிதா ஏற்புரை வழங்கினார்.



இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சமீரன், கிருஷ்ணா ஸ்வீட்ஸ் உரிமையாளர் மற்றும் சமூக ஆர்வலர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...