கோவை மலுமிச்சம்பட்டி அருகே மதுபான பார் முன்பு தொழிலாளி அடித்துக் கொலை - ஐந்து பேர் கொண்ட கும்பலுக்கு வலைவீச்சு

கோவை மலுமிச்சம்பட்டி அருகே மதுபான கடை முன்பாக நடைபெற்ற தகராறில் மர்ம கும்பல் தாக்கயதில் படுகாயமடைந்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரை தாக்கிய கும்பலை பிடிக்க செட்டிபாளையம் போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.


கோவை: கோவை மலுமிச்சம்பட்டி அன்பு நகர் பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன் (39). தொழிலாளியான இவருக்கு திருமணமாகி 2 மகள்கள் உள்ளனர்.

இவர் நேற்று தனது நண்பர்களுடன் டாஸ்மாக் கடைக்கு மது குடிக்க சென்ற போது, மது பாருக்கு வெளியே நின்றிருந்த 5 பேர் கொண்ட கும்பலுக்கும், பிரபாகரன் நண்பருக்கும் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. பின்னர், சிறிது நேரம் கழித்து பிரபாகரன் அங்கிருந்து தனது நண்பர்களுடன் இரு சக்கர வாகனத்தில் கிளம்பியுள்ளார், அதேபோல அந்த கும்பல் பாரில் இருந்து காரில் கிளம்பியுள்ளனர்.

அப்போது, காரில் வந்தவர்களுக்கு வழிவிடவில்லை என கூறி காரில் வந்த நபர்கள், இரு சக்கர வாகனத்தில் வந்த ஞானபிரகாஷ், தமிழ்செல்வன், பிரபாகரன் ஆகியோருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், அவர்கள் 3 பேரையும் தாக்கினர். தாக்குதலை சமாளிக்க முடியாமல் ஞானபிரகாஷ், தமிழ்செல்வன் ஆகியோர் அங்கிருந்து தப்பி ஓடினர்.

இதனிடையே, அந்த கும்பலை சேர்ந்தவர்கள் ஆத்திரத்தில் பிரபாகரனை கீழே தள்ளி தென்னை மட்டையால் சரமாரியாக தாக்கியதுடன், அங்கே கிடந்த சிமெண்ட் கல்லை எடுத்து அவரது தலையில் போட்டனர். பின்னர், அங்கிருந்து தப்பினர்.



இதில், பலத்த காயமடைந்த பிரபாகரன் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி பிரபாகரன் இன்று பரிதாபமாக உயிரிழந்தார்.

சம்பவம் குறித்து செட்டிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், டாஸ்மாக் கடை அமைந்துள்ள பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து தப்பி ஓடிய 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...