கோவை ஈஷா யோகா மையத்தில் பயிற்சிக்கு சென்ற பெண் மாயம் - கணவர் ஆலாந்துறை போலீசில் புகார்

கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்திற்கு டிசம்பர் 11ஆம் தேதி பயிற்சிக்காக சென்ற சுபஸ்ரீ என்ற பெண், மாயமானதை தொடர்ந்து கணவர் பழனிக்குமார் அளித்த புகாரின் பேரில் ஆலந்துறை போலீசார் தீவிர விசாரணை.


கோவை: திருப்பூர் மாவட்டம் அவினாசியை சேர்ந்தவர் பழனிக்குமார். பனியன் நிறுவனத்தில் தர கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறார்.

இவரது மனைவி சுபஶ்ரீ (34). இவரும் தனியார் பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றார். இவர்களுக்கு 11 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது.

இந்நிலையில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் சுபஶ்ரீ ஈஷா யோகா மையத்தில் சைலன்ஸ் என்ற யோகா பயிற்சி மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் மற்றொரு பயிற்சிக்காக கடந்த 11 ஆம் தேதி மீண்டும் கோவை ஈஷா யோகா மையத்திற்கு சென்றுள்ளார்.

இதனிடையே நேற்றுடன் பயிற்சி முடிவடைந்ததால் அவரை அழைத்துச் செல்ல அவரது கணவர் வந்து பார்த்த போது, சுபஸ்ரீ நீண்ட நேரம் வெளியே வரவில்லை என்று கூறப்படுகிறது.

இதனிடையே கணவர் பழனிக்குமார் உள்ளே சென்று பார்த்த போது, சுபஸ்ரீ ஈஷா யோகா மையத்தில் இல்லாதது தெரியவந்தது. இதையடுத்து அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது சுபஶ்ரீ காலையிலேயே வெளியே சென்ற காட்சி பதிவாகி இருந்தது.

மேலும் அவர் கால் டாக்ஸியில் லிப்ட் கேட்டு செம்மேடு பகுதிக்கு சென்றதாக தெரியவந்தது. ஆனால் அவரை தொடர்பு கொள்ள முடியாததால் கணவர் பழனிக்குமார் கோவை ஆலந்துறை போலீசில் புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், மாயமான சுபஶ்ரீயை தேடி வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...