கோவை ஆலாந்துறை அருகே இருசக்கர வாகனம் மோதி சாலையை கடக்க முயன்றவர் பலி - ஓட்டுனரிடம் போலீசார் விசாரணை..!

கோவை ஆலாந்துறை அருகேயுள்ள சிறுவாணி சாலையை கடக்க முயன்ற தனியார் நிறுவன காவலாளி சண்முகசுந்தரம் மீது அவ்வழியே வந்த இருசக்கர வாகனம் மோதியதில் தூக்கி வீசப்பட்ட அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


கோவை: கோவை மாவட்டம் ஆலாந்துறை கிரீன் கார்டன் பகுதியை சேர்ந்தவர் சண்முகசுந்தரம் (63). இவர் தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் நேற்று பணிக்குச் சென்ற போது, சிறுவாணி சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது கோவையில் இருந்து பூலுவபட்டியை நோக்கிச் அதிவேகமாக சென்ற இரு சக்கர வாகனம் ஒன்று சாலையை கடக்க முயன்ற சண்முகசுந்தரம் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த சண்முக சுந்தரத்தை அங்கிருந்தவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இச்சம்பவம் தொடர்பாக ஆலாந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த சதீஷ்குமார் என்ற இளைஞரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இருசக்கர வாகனம் மோதியதில் தனியார் நிறுவன காவலாளி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...