திமுக ஆட்சியில் உயிர் பெற்ற 'புலம்பெயர் தமிழர் நல வாரியம்' -புலம்பெயர் தமிழர்களுக்கு தூதரக, கல்வி, விபத்து உதவிகள் வழங்க திட்டம்

வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களுக்கு தேவையான நலத்திட்டங்கள், தூதராக உதவிகள், வெளிநாடுகளில் தமிழ் கல்வி, கலை, பண்பாடு மற்றும் கருத்து பரிமாற்றத்திற்கான நடவடிக்கைகள் இவ்வாரியம் மூலம் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



கோவை: தமிழர்கள் கால் பாதிக்காத கண்டம் உண்டா..? என்று சொல்லும் அளவிற்கு, பரந்து விரிந்த பிரபஞ்சம் முழுவதும் கடல் கடந்து வாழும் தமிழ் இனம் இல்லாத நாடுகளே இல்லை என்று சொல்லலாம். எங்கு பிறந்தாலும், வாழ்ந்தாலும், வளர்ந்தாலும் தமிழர்களின் தாயகம் தமிழ்நாடே. அப்படிப்பட்ட தமிழர்களின் நலனை காக்கும் விதமாக, வெளிநாடு வாழ் தமிழர் நலச் சட்டம் மற்றும் புலம்பெயர் தமிழர் நல வாரியம் அமைக்க முன்னெடுக்கப்பட்டது. ஆனால், கடந்த 10 ஆண்டுகளாக அவ்வாரியம் அமைக்காமல் கிடப்பில் போடப்பட்டது.

திமுக ஆட்சியில் உயிர் பெற்ற 'புலம்பெயர் தமிழர் நல வாரியம்"

உலகெங்கும் வாழும் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைத்திடவும், அவர்களுக்குத் தேவையான உதவிகள் செய்திடவும், புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்யும் பொருட்டு 'வெளிநாடு வாழ் தமிழர் நலச்சட்டம்' 2011-ஆம் ஆண்டு மார்ச் 1-ஆம் நாள் அன்றைய முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களது அரசால் இயற்றப்பட்டது.

அதனுடன் 'புலம்பெயர் தமிழர் நலவாரியம்' ஒன்று உருவாக்கப்பட்டு, அவர்களுக்கென நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டன. ஆனால், 2011 ஆம் ஆண்டு ஆட்சி அரியணை அதிமுக வசம் சென்ற பிற்பாடு, அத்திட்டம் வெறும் அறிவிப்பாகவே நின்றுவிட்டது.

மீண்டும் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி அமைந்த பிறகு, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், 'வெளிநாடுவாழ் தமிழர் நல வாரியம்' அமைக்கப்படும் என்ற அறிவிப்பினை வெளியிட்டார். இந்த அறிவிப்பினைச் செயல்படுத்தும் விதமாக, கீழ்க்காணும் தலைவர், அரசுசார் அலுவலர்கள் மற்றும் அயலகத் தமிழர் பிரதிநிதிகளை உறுப்பினர்களாக கொண்டு புலம்பெயர் தமிழர் நல வாரியத்தினை அமைத்திட முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தலைவராக கார்த்திகேய சிவசேனாபதி நியமனம்.

புலம்பெயர் தமிழர் நலவாரியத்தின் தலைவராக திருப்பூர் மாவட்டம், காங்கேயம் வட்டம், பழையகோட்டையைச் சேர்ந்த, கார்த்திகேய சிவசேனாபதி நியமிக்கப்பட்டுள்ளார். இவர், ஏற்கனவே திமுக சுற்றுச்சூழல் அணியின் செயலாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிற உறுப்பினர்கள் யார் யார்?

நல வாரியத்தின் உறுப்பினர்களாக புலம் பெயர் தமிழர்கள் கணிசமான அளவில் வசிக்கும் மொரிஷியஸ் நாட்டிலிருந்து ஆறுமுகம் பரசுராமன், இங்கிலாந்து நாட்டிலிருந்து லண்டனில் வசிக்கும் முஹம்மது பைசல், ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் சித்திக் சையது மீரான், வடஅமெரிக்காவில் வசிக்கும் கால்டுவெல் வேள்நம்பி, சிங்கப்பூரில் வசிக்கும் திரு. ஜி.வி.ராம் என்கிற கோபாலகிருஷ்ணன் வெங்கடரமணன் உள்ளிட்டோர் உலக நாடுகளில் இருந்து வாரிய உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டிருக்கின்றனர்.

நிதி ஒதுக்கீடு:

நல வாரியத்துக்கு நியமிக்கப்படும் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் பதவிக் காலம் மூன்று ஆண்டுகள். வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர்களுக்கான நலத் திட்டங்களை செயல்படுத்திட 5 கோடி ரூபாய் 'வெளிநாடுவாழ் தமிழர் நலநிதி' என மாநில அரசின் நிதியை ஒதுக்கியுள்ளது. அதோடு, மட்டுமல்லாமல் மூலதனச் செலவீனமாக ரூபாய். 1.40 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழர் கலாச்சாரம், பண்பாடு, தமிழர்களின் மாண்பு மரபை நன்கு அறிந்த வாரியத்தின் தலைவர், கார்த்திகேய சிவசேனாபதி மற்றும் வெளிநாடு, வெளி மாநிலம் என அனைத்து பகுதிகளின் முக்கிய பிரதிநிதிகளாக நியமிக்கப்பட்டுள்ள உறுப்பினர்கள், உலக தமிழர்களை ஒரு புள்ளியில் இணைத்து நல பணிகளை மேற்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நல வாரியத்தால் ஏற்படக்கூடிய நன்மைகள் என்ன?

புலம் பெயர் தமிழர் நல வாரியத்தின் மூலம் பல்வேறு விதமான நல உதவிகள் வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு கிடைக்கக்கூடும். வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களுக்கு தேவையான நலத்திட்டங்கள், தூதராக உதவிகள், வெளிநாடுகளில் தமிழ் கல்வி, கலை, பண்பாடு மற்றும் கருத்து பரிமாற்றத்திற்கான நடவடிக்கைகள் இவ்வாரியம் மூலம் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வாரியத்தின் வாயிலாகப் பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு ஏதுவாக வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர்களின் விவரங்களை பெற

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...