உதகை அருகே சுடுகாட்டில் பிளாஸ்டிக் கவரால் சுற்றப்பட்டு கிடந்த ஆண் சடலம் - போலீசார் தீவிர விசாரணை..!

உதகை அடுத்த எமரால்டு பகுதி சுடுகாட்டில் பிளாஸ்டிக் கவரில் சுற்றப்பட்ட நிலையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு வீசப்பட்ட உடலா என போலீசார் தீவிர விசாரணை.



நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகை அருகேயுள்ள எமரால்டு பகுதியில் சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் சுடுகாடு அமைந்து உள்ளது. இதை எமரால்டு, சுரேந்திர நகர், பெரியார் நகர், நேரு கண்டி, நேரு நகர், லாரன்ஸ் ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் எமரால்டு சுடுகாடு பகுதியை சுற்றி இருந்த புதர்களை அகற்றும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்ட போது பிளாஸ்டிக் கவரில் சுற்றப்பட்ட நிலையில் சடலம் ஒன்று கிடந்துள்ளது. அதனை கண்டு அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள், உடனடியாக எமரால்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.



இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக உதகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் இந்த உடல் கொலை செய்து இங்கு வீசப்பட்டதா அல்லது, பிரேத பரிசோதனை செய்த உடலை புதைக்காமல் வீசப்பட்டதா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே மீட்கப்பட்ட சடலம் 60 வயது மதிக்கதக்க ஆணின் உடல் என்பது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து எமரால்டு போலீசார விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...