ஒரே நாடு, ஒரே ரேஷன் போல, ஒரே சுடுகாடு என்பதை கொண்டு வர வலியுறுத்தி கோவையில் தலித் விடுதலை கட்சியினர் ஆர்ப்பாட்டம்

அன்னூர் அருகே பொது சுடுகாட்டில் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த மூதாட்டியின் உடலை அடக்கம் செய்யவிடாமல் தடுத்ததை கண்டித்து, கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தலித் விடுதலை கட்சியினர் ஆர்ப்பாட்டம்.


கோவை: கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள ஒன்னக்கரசாம் பாளையம் பகுதியை சேர்ந்த மூதாட்டி ரங்கம்மாள். பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த இவர் கடந்த 13ம் தேதி வயது மூப்பின் காரணமாக உயிரிழந்தார்.

இந்நிலையில் அவரது உடலை அங்குள்ள பொது சுடுகாட்டில் அடக்கம் செய்ய கொண்டு சென்ற போது, அங்குள்ள சில நபர்கள் ஜாதியை குறிப்பிட்டு தடுத்து நிறுத்தி அங்கு அடக்கம் செய்ய கூடாது என மிரட்டியதாக கூறப்படுகிறது.

பின்னர் பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பின்னர், அரசு அலுவலர்கள் சிலர் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து அவரது உடல் அங்கு அடக்கம் செய்யப்பட்டது.



இந்நிலையில் ஜாதியை குறிப்பிட்டு உடலை அடக்கம் செய்ய விடாமல் தடுத்ததை கண்டித்து கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கோவை மாவட்ட தலித் விடுதலை கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



இந்த ஆர்ப்பாட்டத்தில் சம்பவத்தை கண்டித்து கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மேலும் ஒரே நாடு ஒரே ரேஷன் என கூறி வரும் மத்திய அரசு ஒரே சுடுகாடு என்ற நிலையை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தலித் விடுதலை கட்சியின் மாநில பொதுச் செயலாளர் செங்கோட்டையன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.

மேலும், இதில் இணை பொதுச் செயலாளர்கள் விடுதலை செல்வன், சகுந்தலா தங்கராஜ் உட்பட ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கம், சாதி ஒழிப்பு முன்னணியினர் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...