திருப்பூர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்த பொதுமக்கள் - நடவடிக்கை தொடர்பாக ஆணையர் பிரபாகரன் நேரில் ஆய்வு

திருப்பூர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் குறைதீர் கூட்டத்தின் போது வழங்கிய மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை மற்றும் தீர்வு தொடர்பாக மனு அளித்த பொதுமக்களிடம் காவல் ஆணையர் பிரபாகரன் நேரில் அழைத்து விசாரணை.


திருப்பூர்: திருப்பூர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மாதம் தோறும் பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் ஏராளமான மக்கள் தங்கள் புகார்களை மனுக்களாக மாநகர காவல் ஆணையரிடம் வழங்குவது வழக்கம்.

இவ்வாறு பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய நடவடிக்கை இல்லை என்ற குற்றச்சாட்டு நிலவி வந்தது. இந்த நிலையில் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு மாநகர போலீஸ் கமிஷனர்களுக்கு மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து உரிய அறிக்கை சமர்ப்பிக்க அறிவுறுத்தி இருந்தார்.

அதன் அடிப்படையில் கடந்த நவம்பர் மாதத்தில் இருந்து டிசம்பர் 15ஆம் தேதி வரை 208 பேர் திருப்பூர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு கொடுத்திருந்தனர். இதில் 163 வழக்குகள் தீர்வு காணப்பட்டது.



மீதமுள்ள 45 மனுக்கள் தீர்வு காணப்படாத நிலையில் புகார் கொடுத்த பொதுமக்களை நேரில் அழைத்து காவல்துறை எடுத்த நடவடிக்கை குறித்து திருப்பூர் மாநகர காவல் ஆணையர் பிரபாகரன் கேட்டறிந்தார்.



இதில் காவல்துறை எடுத்த நடவடிக்கை திருப்திகரமாக இல்லாததை மனு கொடுத்த பொதுமக்கள் கூறியதை தொடர்ந்து மீண்டும் மனுவை விசாரணை செய்து பொதுமக்கள் கொடுத்த புகாரை விசாரணை செய்ய காவல் நிலைய அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார்.



மேலும் மனுதாரர்களின் கருத்துக்களை முறையாக விசாரித்து தமிழக டிஜிபி சைலேந்திர பாபுவுக்கு அனுப்பப்படும் என்றும் மாநகர காவல் ஆணையர் பிரபாகரன் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...